Nov 08 Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, தேவையில்லாத அலைச்சல் மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.!

Published : Nov 07, 2025, 05:08 PM ISTUpdated : Nov 07, 2025, 05:23 PM IST

November 08 Dhanusu Rasi Palan : நவம்பர் 08, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
நவம்பர் 08, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களின் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அலைச்சலும், சில அத்தியாவசிய பயணங்களும் ஏற்படலாம். அன்றாட பணிகளில் கூடுதல் கவனம் தேவை. பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

நிதி நிலைமை:

எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். எனவே செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாளாகும். புதிய முதலீடுகள் குறித்து ஆழமாக விசாரிப்பது அவசியம். நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடக்கலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் என்றாலும், பணவரவில் ஏற்ற இறக்கம் இருக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் சில சமயங்களில் சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவே அனுசரித்துச் செல்லவும். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் பலனைத் தரும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். தேவையற்ற கோபத்தை கட்டுப்படுத்துவது தனிப்பட்ட உறவுகளுக்கு நன்மை பயக்கும்.

பரிகாரங்கள்:

குரு பகவானின் அருளைப் பெற குரு காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வரலாம். தட்சணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடலாம். உங்கள் குலதெய்வத்தை வணங்குவது நன்மைகளைத் தரும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories