அமாவாசையில் பிறந்தவர்கள் திருடனா? இது நிஜமா?

First Published | Sep 6, 2023, 11:47 AM IST

அமாவாசையில் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் திருடனாக இருப்பார்கள் என்று பலர் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது உண்மையா? இல்லையா? என்பதை பற்றி இஇக்கட்டுரை மூலம் நாம் தெரிந்துக் கொள்ளலாம்..

அமாவாசை அன்று பிறப்பவர்கள் உண்மையில் திருடர்களா?.. அமாவாசை என்பது சூரியன் மற்றும் சந்திரன் ஒரே நேரத்தில் சந்திக்கும் நாள் என்பர். மேலும் ஒன்பது கிரகங்களும், அமாவாசை மற்றும் பௌர்ணமி திதி அன்று வலுவடையும். ஆகையால் இந்த இரண்டு தினங்களிலும் பிறக்கும் குழந்தைகள் அதிக திறமையுடன் இருப்பார்கள்.
 

பொதுவாகவே அமாவாசையில் பிறந்தவர்களுக்கு மூளையில் அதிக பலம் இருப்பதால், தங்களது வாழ்க்கையில் வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பொறுமை இவர்களுக்கு  இருக்காது. மேலும் தங்களுக்கான வாய்ப்புகளை தானே உருவாக்க நினைப்பார்கள். இதுபோன்ற தவறுகளை அவர்கள் அறியாமல் செய்வது உண்டு.

Latest Videos


அதுபோல் இவர்கள் அதிக திறமைசாலியாக இருந்தாலும் பிறர் இவர்களுடைய திறமையை ஒருபோதும் ஏற்றுகொள்ளமாட்டார்கள். இதனால் சில சமயங்களில் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வெறுப்பது உண்டு.

இவர்களின் அதீத திறமையை கண்டு சிலர் பொறாமையால் இவர்களை பார்த்து தலைக்கனம் பிடித்தவர்கள் என்று கூறுவது உண்டு. ஆனால் இவர்களை நன்றாக புரிந்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே இவர்களின் உண்மையான முகம் தெரியும்.
 

அதுபோலவே, இந்நாளில் பிறந்தவர்கள் எப்போதுமே மன வறுத்தத்தில் தான் இருப்பார்கள். மேலும் இவர்களது மனதில் எப்போதும் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் அவர்கள் திருப்தி அடையமாட்டார்கள்.

மேலும் இவர்கள் சாதனை புரிந்தாலும் கூட அதில் திருப்தி இல்லாமல்  சாதிக்கவில்லை என்று எண்ணுவர். இதனால் மன உளைச்சலில் கூட இருப்பார்கள். இப்படி இவர்கள் மன வறுத்தத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் அமாவாசை அன்று சந்திரன் வலுவிழந்து இருக்கும். 
 

இவர்கள் எதிலும் திருப்தி அடையமாட்டார்கள். குறிப்பாக தங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைந்தாலும் கூட அதில் திருப்தி இருக்காது. எப்போதுமே குறை சொல்லி கொண்டே இருப்பார்கள்.

Baby

அமாவாசையில் பிறந்தவர்கள் நிச்சயம் திருடர்கள் தான். ஆனால் இவர்கள் திருடுவது பொருட்களை அல்ல, மற்றவர்களின் மனதை. இதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பதால், இவர்களை ஒரு அறிவியல் திருடர்கள் என்று சொல்லலாம்..

click me!