மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலோ, வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேறினாலோ சிலரால் தாங்கிக்க முடியாது. உடனே பொறாமைப்படுவார்கள். நேரில் சிரித்துப் பேசிவிட்டு, பின்னால் குழி பறிப்பார்கள். இப்படிப்பட்ட பொறாமை பிடித்த பெண்களிடம் இருந்தும் உங்கள் மனைவி தள்ளி இருப்பது நல்லது. அவர்களுடன் பழகினால், உங்கள் வீட்டு ரகசியங்கள் அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
உங்கள் வளர்ச்சியைக் கண்டு அவர்கள் பொறுக்க மாட்டார்கள். கடைசியில் பிரச்சனைதான் வரும். எனவே, இவர்களைத் தள்ளி வைத்தால், உங்கள் வீட்டு விஷயங்கள் வெளியே போகாது. சாணக்கியர் சொன்ன இந்த விஷயத்தை ஃபாலோ செய்தால், கணவன்-மனைவிக்கு நடுவே மூன்றாவது நபரால் பிரச்சனையே வராது. சந்தோஷமாக இருக்கலாம்.