ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தத்துவம் உண்டு. நீர் ராசிகள் என அழைக்கப்படும் கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றுக்கு வெள்ளி மிகவும் நல்லது. ஆனால் நெருப்புத் தத்துவ ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஆகியவற்றுக்கு வெள்ளி எப்போதும் சாதகமாக இருப்பதில்லை. நெருப்பு ராசிக்காரர்கள் இயல்பாகவே சுறுசுறுப்பானவர்கள். குளிர்ச்சி தரும் வெள்ளி அவர்களின் வேகத்தைக் குறைக்கலாம்.
சிலருக்கு வெள்ளி அணிந்த பிறகு தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதாக ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது. சந்திரனின் ஆதிக்கம் அதிகம் உள்ள வெள்ளி, ஏற்கனவே உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களுக்கு மன அலைச்சலைத் தரக்கூடும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் என்பது வெறும் அணிகலன் மட்டுமல்ல. அது ஒரு மனிதரின் குணநலன்களை, அவர்களின் ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிக்காது.