Astrology: சனிபகவான் ஆட்டத்தை தடுத்து அள்ளி கொடுக்கும் சுக்கிரன்.! அடுத்த 3 மாதங்களில் குபேரன் ஆகும் 3 ராசிகள்.! ரிசர்வ் வங்கியே கடன் கேக்குமாம்.!

Published : Sep 06, 2025, 09:33 AM IST

அடுத்த மூன்று மாதங்களில் ரிஷபம், துலாம், மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அருளால் செல்வ வளம் பெருகும். சனியின் தடைகள் இருந்தாலும், சுக்கிரன் அதைத் தடுத்து செல்வ வளம் தருவார். 

PREV
14
சனி பகவான் தடைகள் காணாமல் போகும்.!

ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் தாமதம் செய்வார் ஆனால் ஒருபோதும் தவறாது எனக் கூறப்படுகிறது. அவர் சோதனைக்கும் பொறுமைக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறார். அதே நேரத்தில் சுக்கிரன் செல்வம், சுகவாழ்வு, கலை, கல்வி, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு பிரதான காரகன். சனி சோதனைகள் கொடுக்க, அதற்கான தீர்வாக சுக்கிரன் நம் வாழ்க்கையில் அள்ளிக் கொடுக்கிற சக்தியாக செயல்படுவார். இப்போது வரும் அடுத்த மூன்று மாத காலப்பகுதியில், சில ராசிகாரர்களுக்கு சுக்கிர பகவானின் அருள் பெருகப் போகிறது. சனியின் தடைகள் அனைத்தையும் தள்ளி வைத்து, இந்த மூன்று ராசிகளுக்கு செல்வ வளம் குவிந்துகிடக்கும்.

24
ரிஷப ராசி - எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும்

ரிஷப ராசிக்காரர்களுக்கு அடுத்த 3மாதங்களில் வியாபாரம், தொழில், முதலீடு ஆகியவற்றில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும். பணவசதி அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. குடும்பத்தில் நீண்ட நாளாக இருந்த சிக்கல்கள் தீரும். சனியின் சோதனை இருந்தாலும் சுக்கிரன் அதை வெற்றிகரமாக மாற்றுவார். வங்கிக் கடன்கள் குறையும், உங்களின் செல்வாக்கு உயர்ந்துப் பேசப்படும். சமூகத்தில் கௌரவம் கூடும். உங்களைச் சந்திக்கவே பலர் வருவார்கள்.

34
துலாம் ராசி - சாதகமான காலம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், இவர்களுக்கு மிகுந்த சாதகமான காலம் வர இருக்கிறது. கடந்த மாதங்களில் சனியின் தடைகளால் ஏற்பட்ட இடையூறுகள் அகன்று, நிதி வளம் பெருகும். சம்பள உயர்வு, பதவி உயர்வு வாய்ப்பு அதிகம். தொழிலில் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வெளிநாட்டு வாய்ப்புகள் திறக்கப்படும். கலைத்துறையில் உள்ளவர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள். பணம் குவியும் அளவுக்கு வாய்ப்புகள் கைக்கு வந்து சேரும்.

44
மகர ராசி - எதிர்பாராத லாபம் கிடைக்கும்

மகர ராசிக்காரர்களுக்கு சனி அதிபதி என்றாலும், சுக்கிரனின் அருளால் பெரும் மாற்றம் ஏற்படும். பல ஆண்டுகளாக உழைத்த உழைப்பின் பலன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம், புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் குறையும். சொத்து விவகாரங்களில் வெற்றி உங்களுக்கே. சனி சோதனை கொடுத்தாலும் சுக்கிரன் அதைச் செல்வமாக மாற்றுவார். உங்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும்.

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களில் குபேரன் போல பணம் குவியும். ரிசர்வ் வங்கி கூட உங்களிடம் கடன் கேட்கும் அளவிற்கு செல்வ வளம் கிடைக்கும் என்று சொல்லலாம். சனியின் சோதனைகள் இருந்தாலும் சுக்கிரனின் அருள் அதனைத் தடுத்து, செல்வ வளம் தரப்போகிறது. எனவே ரிஷபம், துலாம், மகர ராசிக்காரர்களே – அடுத்த மூன்று மாதங்கள் உங்களுக்கு பொற்காலம் என்பதை உறுதியாக நம்பலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories