Astrology: புதன் பார்வையால் 5 ராசிகள் காட்டில் அதிர்ஷ்ட மழை! கடன் பிரச்சினைகள் தீரும்.!

Published : May 07, 2026, 05:41 AM IST

ஜோதிடத்தின்படி, மே 7, 2026 அன்று புதன் கிரகம் பரணி நட்சத்திரத்திற்குள் நுழைகிறது. இதனால், வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான பலன்களைத் தரும்.

PREV
15
ரிஷப ராசி நேயர்களே.!

ரிஷப ராசி நேயர்களே உங்களுக்கு நல்ல காலம் பிறக்க போகுது. மே 7க்கு பிறகு உங்களுக்கு சாதகமான பல்வேறு செயல்கள் அரங்கேறப்போகுது. உங்கள் கடின உழைப்புக்கு அலுவலகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். எதிரிகள் கூட உங்களுக்கு வழிவிட்டு செல்வர். மேலதிகாரிகள் உங்களைப் மனதாரா பாராட்டுவார்கள். நிதி விஷயங்களில் புதிய வாய்ப்புகளோ அல்லது கூடுதல் வருமானமோ வர வாய்ப்புள்ளதால் உங்களின பணகஷ்டம் காணாமல் போகும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு ஸ்திரத்தன்மையை உணர்வீர்கள். ஆனாலும், செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்து மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருந்தால் சாதனை படைக்கலாம்.

25
கடகம் ராசி நேயர்களே.!

கடகம் ராசி நேயர்களே ஜோதிடப்படி, மே 7க்கு பிறகு உங்களுக்கு உணர்வுப்பூர்வமாகவும் குடும்ப ரீதியாகவும் பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெறவுள்ளது.  மனநிறைவு முழுமையாக கிடைக்கும். பிரிந்து இருக்கும் உறவுகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மீண்டும் சேரும் வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சந்தோஷங்கள் பலமடங்கு அதிகரிக்கும். உங்கள் தொழில் அல்லது பணம் சம்பந்தமாக சில நல்ல செய்திகள் வரலாம். பழைய பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதனை சாதகமாக பயன்படுத்திகொள்ளுங்கள். உங்கள் முடிவுகளுக்குக் குடும்பத்தினர் முழுமையான ஆதரவு தருவார்கள், இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். ஆண்டவனே உங்க பக்கம் இருகுறான் கவலையெல்லாம் இனி இல்லை.

35
கன்னி ராசி நேயர்களே.!

கன்னி ராசி நேயர்களே ஜோதிடப்படி, மே 7 ஆம் தேதிக்கு பிறகு உங்கள் வேலையில் செயல்திறன் அதிகரிக்கும். ஒரு புதிய ப்ராஜெக்ட் அல்லது பொறுப்பு உங்களைத் தேடி வர வாய்ப்புள்ளது.  அதிகாரம் உங்களை தேடி வரும் என்பதால் அதனை ஏற்றுக்கொண்டு நேர்மையாக நடந்தால் புதிய புகழை பெருவீர்கள். இனி நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும்.  புதிய தொழில் ஒப்பந்தங்கள் உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வாக உணரலாம், அதனால் ஓய்வு எடுப்பது அவசியம். கவனமாக இருந்தால் சாதிக்கலாம்.

45
மேஷ ராசி நேயர்களே.!

மேஷ ராசி நேயர்களே ஜோதிடப்படி மே 7க்கு பிறகு உங்கள் நீண்ட காலத் திட்டங்கள் வெற்றியை நோக்கி நகரத் தொடங்கும். முதலீடுகள் அல்லது சேமிப்பிலிருந்து நல்ல பலன்கள் கிடைக்கலாம். உங்கள் வேலையில் ஸ்திரத்தன்மையையும் முன்னேற்றத்தையும் காண்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கையும் பொறுமையும் கடினமான சூழ்நிலைகளை எளிதாகச் சமாளிக்க உதவும். குடும்பத்திலும் நல்லிணக்கம் நிலவும்.

55
மீன ராசி நேயர்களே!

மீன ராசி நேயர்களே! ஜோதிடப்படி மே 7 க்கு பிறகு கிரியேட்டிவிட்டி மற்றும் மன அமைதிக்கு ஒரு சிறந்த நாள். கலை அல்லது கிரியேட்டிவ் வேலை செய்பவர்களுக்குச் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் அல்லது சக ஊழியர்களிடமிருந்து உதவி கிடைக்கும். எதிர்காலத்தில் ஒரு புதிய யோசனை உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும். உங்கள் மனம் பாசிட்டிவாக இருக்கும், மன அழுத்தம் குறையும்.

Read more Photos on
click me!

Recommended Stories