Budhaditya Rajyog: டிசம்பர் 2 முதல் புதாதித்ய ராஜயோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தீர்ந்து அதிர்ஷ்டம் அடிக்கும்

Published : Nov 26, 2026, 06:15 AM IST

அப்பாடி இனி எல்லா பிரச்சினையும் தீரப்போகுது.! டிசம்பர் மாதத்தில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதன் மூலம் 4 ராசிக்காரர்கள் மிகச் சிறந்த பலன்களைப் பெறுவார்கள். பணக்கஷ்டம் முழுமையாக நீங்கி, வாழ்க்கையில் இருக்கும் பிற சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்கும்

PREV
15
புதாதித்ய ராஜயோகம்

டிசம்பர் தொடக்கத்தில் ஒரு பெரிய யோகம் உருவாகிறது. இதன் பெயர் புதாதித்ய ராஜயோகம். இந்த யோகத்தால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போகிறது. நவம்பர் 16-ம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ளார். டிசம்பர் 2-ம் தேதி புதன் கிரகமும் விருச்சிக ராசிக்கு மாறுகிறது. இதனால், அன்றைய தினம் மிகவும் மங்களகரமான புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் 4 ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வாழ்வில் பெரிய நிலையை அடைவீர்கள். பணக்கஷ்டம் தீரும். வேலை குறித்த கவலைகளும் விலகும்.

25
மேஷம்

இந்த 4 ராசிக்காரர்களுக்கு இது மிகச் சிறந்த காலகட்டமாக இருக்கும். நல்ல நேரம் தொடங்கும். அதுமட்டுமின்றி, நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். வேலையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த நேரத்தில் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். எனவே தேவையற்ற கவலை வேண்டாம். நல்ல நேரத்தை அனுபவிக்க தயாராகுங்கள்.

35
கடகம்

இந்த ராசிக்காரர்களுக்கு இது மிகச் சிறந்த காலம். குறைகள் நீங்கும். பணப் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. வருமானத்திற்கு புதிய வழிகள் உருவாகும். பதவி உயர்வுக்கான வாய்ப்பும் கிடைக்கும். செல்வமும் அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம். புதாதித்ய ராஜயோகத்தால் குடும்பத்தில் பொற்காலம் தொடங்கும். அன்பான சூழல் நிலவும். அதனால் கவலை வேண்டாம்.

45
மீனம்

புதாதித்ய ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்களும் வாழ்க்கையில் முன்னேற்றத்தின் உச்சியை அடைவார்கள். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து எளிதில் வெளிவருவீர்கள். இனி பணத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. கடன்கள் அடைபடும். நீங்கள் கொடுத்த பணம் இப்போது திரும்பக் கிடைக்கும். தொழில் வளரும். லாபம் அதிகரிக்கும். வேலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

55
கன்னி

டிசம்பர் தொடக்கம் முதல் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம். தேவையற்ற சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெரிய ஆஃபர் கிடைக்கலாம். இந்த நேரத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது. எனவே தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம். பொற்காலத்தை வரவேற்க தயாராகுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories