செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எதிலும் துல்லியத்தை எதிர்பார்ப்பார்கள். ஒரு வேலையை மேம்போக்காகச் செய்யாமல், அதன் நுணுக்கங்களைக் கவனித்துச் செய்வதில் கில்லாடிகளாக விளங்குவார்கள். இவர்களிடம் நேர்மையும், நீதியும் எப்போதும் மேலோங்கி இருக்கும். இவர்களின் நிதானமான அணுகுமுறையே இவர்களுக்கு நிலையான வெற்றியை கொடுக்கும் நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் இவர்களுக்கு ஈடுஇணை யாரும் இருக்க முடியாது
நவம்பர் (November)
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களை எவராலும் அவ்வளவு எளிதில் தடுத்து நிறுத்திவிட முடியாது. இவர்களிடம் இருக்கும் விடாமுயற்சி இவர்களைச் சவால்களைக் கண்டு அஞ்சாத வீரர்களாக மாற்றுகிறது. கடினமான சூழலையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் ரகசிய வித்தை இவர்களுக்கு நன்றாக தெரியும். சாகசங்கள் நிறைந்த பயணங்களிலும், பெரும் இலக்குகளை எட்டும் முயற்சியிலும் இவர்கள் வெற்றியாளர்களாகத் திகழ்வார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி கட்டுரை ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் சுவாரஸ்யமான நோக்கங்களுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்பு என்பது ஒரு ஆரம்பம் மட்டுமே. கடின உழைப்பின் மூலம் தான் வெற்றி கிட்டும். ஒருவரின் குணாதிசயத்துக்கும் ஆளுமைக்கும் பிறந்த மாததுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஏசியாநெட் தமிழ் தெரிவித்துக் கொள்கிறது.