அஷ்டலட்சுமி யோகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் அரிய மற்றும் சக்திவாய்ந்த தன யோகங்களில் ஒன்றாகும். ஜாதகத்தில் செல்வத்தின் அதிபதியான சுக்கிரனும், சுப கிரகமான குருவும் சுப ஸ்தானங்களில் (கேந்திர, கோணங்களில்) பலம்பெற்று அமையும்தோதோ அல்லது ஆட்சி, உச்சம் பெற்று இணையும்போதோ இந்த யோகம் முழுமையாகச் செயல்படுகிறது.
அஷ்டலட்சுமி என்றால் ஆதி லட்சுமி, தானிய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி ஆகிய எட்டு வகையான செல்வங்களின் அருளையும் பெறுவது என்று பொருள். இந்த யோக கால கட்டத்தில் குறிப்பிட்ட சில ராசியினருக்குத் தொழிலில் அசுர வளர்ச்சியும், எதிர்பாராத பண வரவும், சமூகத்தில் மிகப்பெரிய புகழும் கிடைக்கப்பெறும்.