காதல் என்பது ஒரு சாதாரண உணர்ச்சி அல்ல, அது வாழ்க்கையின் உயிரோட்டம். சிலர் காதலை வெளிப்படையாக காட்டாமல் உள்ளுக்குள் வைத்துக்கொள்வார்கள்; சிலர் வெளிப்படையாகச் சொல்லித் தருவார்கள். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு காதல் என்றால் அது அவர்களின் சுவாசத்தோடு கலந்திருக்கும். அவர்கள் ஒருவரை நேசிக்கத் தொடங்கினால், அந்த அன்பு சிறு சிறு செயல்களிலும், வார்த்தைகளிலும், பார்வைகளிலும் வெளிப்படும். “அலைபாயுதே மாதவன்” போல, இவர்களின் இதயம் உண்மையிலேயே உருகி உருகி அலைபாயும். உண்மையான அன்பு என்றால் எப்படி இருக்கும் என்று உலகுக்கு எடுத்துக் காட்டும் ராசிகள் இவர்கள்தான்.
26
கடகம் ராசி - அதிகமான பாசத்தைக் காட்டுவார்கள்
இந்த ராசிக்காரர்கள் இயல்பாகவே பரிவு மிகுந்தவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள் என்பதால் காதலிலும் அதிகமான பாசத்தைக் காட்டுவார்கள். தங்கள் துணையின் ஒவ்வொரு தேவையையும் புரிந்து கொண்டு, அக்கறை செலுத்துவார்கள். சின்னச் சின்ன விஷயங்களிலேயே மகிழ்ச்சி காண்பவர்கள். இவர்களிடம் அன்பு கிடைத்தால் அது முழு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். கடகம் ராசிக்காரர்கள் உண்மையிலேயே “கடலளவு அன்பு” கொண்டவர்கள்.
36
மீனம் ராசி - உருகி உருகி காதலிக்கும் குணம்
மிகுந்த கற்பனை திறன் கொண்டவர்கள். காதலுக்கு கவிதை நிறம் கொடுப்பவர்கள். இவர்களின் மனசு உணர்ச்சிகளால் நிரம்பி இருக்கும். காதலித்தால் பூரண அர்ப்பணிப்புடன் நேசிப்பார்கள். அவர்களிடம் உள்ள காதல் காற்றைப் போல சுற்றியுள்ளவர்களை மூடிவிடும். உருகி உருகி காதலிக்கும் குணம் இவர்களுக்கே அதிகம். இவர்களுடன் வாழும் வாழ்க்கை கனவுப் போல இனிமையாக இருக்கும்.
ரிஷபம் ராசி - இவர்களின் அன்பு சுலபமாகக் கலைந்து போகாது
நிலைத்தன்மை, பொறுமை, நம்பிக்கை – ரிஷபக்காரர்களின் அடையாளம். காதல் உறவைத் தொடங்கினால் அது பாறை போல உறுதியானது. ஒருமுறை நேசித்தால், அந்த அன்பை வாழ்க்கை முழுவதும் காப்பாற்றுவார்கள். இவர்களின் அன்பு சுலபமாகக் கலைந்து போகாது. கடினமான சூழ்நிலையிலும் தங்கள் துணையை விட்டுவிட மாட்டார்கள். “எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்” என்பதே இவர்களின் காதல் கோட்பாடு.
56
துலாம் ராசி - அழகு, இனிமை, நேர்மை
துலாம்காரர்கள் சமநிலையை விரும்புவார்கள். காதலிலும் அதையே பின்பற்றுவார்கள். அழகு, இனிமை, நேர்மை ஆகியவற்றை காதலில் கலந்து, உறவைக் காக்கிறார்கள். இவர்களுடன் இருக்கும் போது வாழ்க்கை ஒரு இனிய இசை போல இருக்கும். தங்கள் துணையைக் கவரும் வகையில் பேசுவதும், சிறு சிறு அன்புக் குறிகளாலும் மகிழ்விப்பதும் இவர்களின் தனித்திறமை.
66
பாசத்தால் நிரம்பிய அழகான உலகை உருவாக்கும்.
இந்த ராசிக்காரர்கள் ஒருவரை காதலிக்கத் தொடங்கினால், அவர்களது அன்பு ஒரு அலைபோல் பெருகிக் கொண்டே இருக்கும். அவர்கள் அன்பு செய்வது சாதாரண காதல் அல்ல, அது உயிரோடு கலந்த உறவாகும். அவர்களுடன் வாழும் ஒருவர், ஒவ்வொரு நாளும் அன்பால் நிரம்பி வாழ்வார். ஆனால் இவர்களின் உணர்ச்சிகளை காயப்படுத்தக் கூடாது. ஒருமுறை மனம் உடைந்தால், அவர்கள் உள்ளத்தில் ஆழ்ந்த காயம் ஏற்படும். முடிவாகச் சொல்ல வேண்டுமெனில், கடகம், மீனம், ரிஷபம், துலாம் – இந்த நான்கு ராசிக்காரர்கள்தான் காதலில் உருகி உருகி அலைபாயும் மாதவன்களாக இருப்பார்கள். இவர்களின் அன்பு ஒருமுறை கிடைத்துவிட்டால், அது வாழ்க்கையை ஒளிரச் செய்யும், பாசத்தால் நிரம்பிய அழகான உலகை உருவாக்கும்.