மிதுனத்தில் குரு - சந்திரன் கூட்டணி.! பணப்பையை நிரப்ப வருகிறது கஜகேசரி யோகம்.! இந்த 5 ராசிகளின் காட்டில் பண மழை தான்.!

Published : Apr 21, 2026, 11:10 AM IST

Jupiter Moon Conjunction in Gemini 2026 Tamil : ஏப்ரல் 21, 2026 ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்த நாளில் குரு உருவாக்கும் ‘கஜகேசரி ராஜயோகம்’ 5 ராசிகளுக்கு அளவில்லாத நன்மைகளை வாரி வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம். 

PREV
18
Jupiter Moon Conjunction in Gemini 2026 Tamil

கிரகங்களின் நிலைகளில் அவ்வப்போது ஏற்படும் மாற்றமானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. கிரகங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து சுப யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் ஏப்ரல் 21, 2026 மங்களகரமான நிகழ்வு ஒன்று நடக்க உள்ளது. மிதுன ராசியில் வீற்றிருக்கும் குரு பகவானுடன் சந்திர பகவான் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறார். ஜோதிடத்தில் இந்த ராஜயோகம் வெற்றி, கௌரவம், செழிப்பு ஆகியவற்றை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

28
கஜகேசரி ராஜயோகம் 2026

குருவும் சந்திரனும் ஒரே ராசியில் சேரும்பொழுது கஜகேசரி ராஜயோகம் என்னும் அரிய யோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் ஒரு நபரை செல்வாக்கு மிகுந்தவராகவும், வெற்றியாளராகவும் மாற்றக்கூடிய கிரகச் சேர்க்கையாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கத்தால் ஒருவரின் வாழ்வில் ஸ்திரத்தன்மையும், நேர்மறையான மாற்றங்களும் ஏற்படும். கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். கஜகேசரி ராஜயோகம் யானை போன்ற பலத்தையும், சிங்கம் போன்ற தைரியத்தையும் தரவல்லது. கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

38
மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. உங்கள் சொந்த ராசியிலேயே இந்த ராஜயோகம் உருவாவதால் மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். நிதி ரீதியான நன்மைகள் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் வலுப்பெறும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரும். அரசு சார்ந்த அல்லது சட்ட விவகாரங்களில் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த தகராறுகள் தீர்க்கப்பட்டு, அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.

48
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் நிதி மற்றும் தொழில் ரீதியான நன்மைகளைத் தர இருக்கிறது. இந்த அரிய கிரக அமைப்பு சிம்ம ராசிக்காரர்களின் வருமானத்தை பல வழிகளில் அதிகரிக்கச் செய்யும். புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். நீங்கள் செய்திருந்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். பழைய கடன் தொல்லைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நிதி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து நிரந்தர நிவாரணம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் மூலம் மிகப்பெரிய தொகை கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

58
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் மாறுதல் பெற்று விலகிச் செல்வார்கள். இதனால் மன நிம்மதி கிடைக்கும். தொழிலில் இருந்த எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் விலகுவார்கள். இதனால் உங்கள் தொழில் சூடு பிடிக்கத் தொடங்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு முக்கிய ஒப்பந்தத்தை உறுதி செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். நற்பெயர் அதிகரிக்கும்.

68
தனுசு

குரு பகவான் தனுசு ராசியின் அதிபதி என்பதால் கஜகேசரி ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மைகளை வழங்க இருக்கிறது. உறவுகள் மற்றும் கூட்டுத் தொழில் செய்து வருபவர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமாக அமையும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். திருமணமாகாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் முடியும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நல்லிணக்கம் நிலவும். தொழிலில் கூட்டாளிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். திருமணம், வளைகாப்பு, காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

78
கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். உங்கள் செல்வம், கௌரவம் மற்றும் வெற்றி ஆகியவை அதிகரிக்கும். உங்கள் முடிவெடுக்கும் திறனும், மனவலிமையும் மேம்படும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளை கேட்பீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான திட்டங்களும் நிறைவேறும். பொன், பொருள், மனை ஆகியவற்றில் முதலீடுகளை செய்வீர்கள். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை அளிக்கத் தொடங்கும்.

88
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories