1 வருடங்களுக்கு பிறகு கன்னி ராசிக்குள் சூரியன்; இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..!!

First Published | Sep 12, 2023, 3:49 PM IST

சூரியன் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி கன்னி ராசியில் நுழைகிறார். சூரியன் கன்னி ராசியில் நுழையும் போது சிலருக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

கிரகங்களின் ராஜாவான சூரியன் இந்த மாதம் ராசி மாறுகிறார். ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். அதன்படி இம்மாதம் செப்டம்பர் 17 மதியம் 01:42 மணிக்கு சூரிய பகவான் கன்னி ராசிக்குள் நுழைகிறார். சூரியன் ஒரு ராசியில் சுமார் 30 நாட்கள் தங்குகிறார். இப்படியே அக்டோபர் வரை கன்னி ராசியில் இருந்து அதன் பிறகு துலாம் ராசியில் பிரவேசிக்கும்.

சூரியன் ராசி சுழற்சியை முடிக்க ஒரு வருடம் ஆகும். சூரியன் கன்னி ராசியில் நுழைவதால் பலருக்கு பொருளாதார ரீதியாக லாபம் கிடைக்கும். அந்த ராசிகள் என்னவென்று பார்ப்போம்…
 

Tap to resize

மேஷம்: கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். மரியாதை கூடும். வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.
 

சிம்மம்: சிம்ம ராசியின் அதிபதி சூரியக் கடவுள். சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் ராசியின் மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சூரியனின் சஞ்சாரம் காரணமாக நீங்கள் அதிர்ஷ்டம் அடையலாம். நிலுவைத் தொகை வசூலிக்க வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சியும் செழிப்பும் கூடும்.
 

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி. இந்த நேரத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.

Latest Videos

click me!