
தமிழ் மாதங்களில் ஆன்மீக ரீதியாகவும், வழிபாட்டு ரீதியாகவும் தனித்துவமான பெருமையைக் கொண்டது ஆடி மாதம். சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையும் இந்த காலத்தை 'கடக மாதம்' என்றும் அழைப்பார்கள். அம்மன் வழிபாடு, குலதெய்வப் பிரார்த்தனை மற்றும் ஆடிப் பெருக்கு போன்ற நதி வழிபாடுகளுக்கு இந்த மாதம் மிகவும் உகந்தது.
ஆன்மீகம் மட்டுமின்றி, ஜோதிட ரீதியாகவும் இந்த ஆடி மாதம் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது. ஏனெனில், இந்த மாதத்தில் புதன், சுக்கிரன், குரு மற்றும் சனி என முக்கிய கிரகங்களின் இடப்பெயர்வுகள் மற்றும் நிலை மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் அசுர வளர்ச்சியையும், எதிர்பாராத யோகங்களையும் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இங்கே பார்ப்போம்
மேஷ ராசியினருக்கு இந்த ஆடி மாதம் எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கப்போகிறது. சூரியன் மற்றும் குருவின் அருட்பார்வையால், உங்களின் நீண்ட நாள் ஆசைகள் மற்றும் கனவுகள் நனவாகும். தொட்டதெல்லாம் துலங்கும் அளவிற்கு அதிர்ஷ்டம் கூடிவரும்.
உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சாதகமான சூழல் நிலவும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
சகோதர வழியில் இருந்த சொத்து தகராறுகள் சுமுகமாக முடிவுக்கு வரும். புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் கைகூடி வரும். வெளிநாட்டு யோகம்: வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி தேடி வரும். உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் உண்டு.
சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால், இந்த ஆடி மாதம் உங்களுக்கு ராஜயோக மாதமாக அமையப்போகிறது. சூரியனின் பலத்தால் உங்களின் பேச்சுத் திறமை அதிகரிக்கும். சமயோசிதமான பேச்சால் குடும்பத்திலும், பணிபுரியும் இடத்திலும் பலரது மனங்களை வெல்வீர்கள். பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றம் உண்டாகும்.
பணவரவு அதிகரிப்பதுடன், லாபகரமான முதலீடுகளும் அமையும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுகிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இந்த மாதம் உடல்நலம் மிகச் சிறப்பாக இருக்கும். புத்துணர்ச்சியோடும், அசாத்திய ஆற்றலோடும் செயல்படுவீர்கள்.
கன்னி ராசியினருக்கு சூரியன் மற்றும் குருபகவானின் ஆசியால் இந்த மாதம் தடைகளைத் தகர்க்கும் மாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த தொழில்முறை சிக்கல்கள் யாவும் முடிவுக்கு வரும்.
பொருளாதாரம்: நிதி நிலைமை சீராகும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் வரக்கூடும். வீண் செலவுகள் குறைந்து, சேமிப்பு உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை அமையும்.
ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகளும், பதவிகளும் உயரும்.பொதுப்பலன்: ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த ஆடி மாதம் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் ஒருசேரக் கொண்டு சேர்க்கும்.
மீன ராசிக்காரர்களின் வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்களை இந்த ஆடி மாதம் கொண்டு வரப்போகிறது. பொருளாதார ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனைத் தரும். முந்தைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபமும், வருமானமும் வந்து சேரும். நிதிப் பற்றாக்குறை நீங்கும்.
தொழில் அல்லது வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தானாகத் தேடி வரும்.குடும்பம்: குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும். குடும்ப விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். தம்பதியினருக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.