Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?

Published : Dec 06, 2025, 11:31 AM IST

விவசாயிகளுக்காக கோவை அருகே இ-நாம் தளம் மூலம் நேரடி வேளாண் பொருட்கள் ஏலம் தொடங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் தேங்காய், பாக்கு போன்ற விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நியாயமான விலைக்கு விற்று, பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறலாம்.

PREV
15
விவசாயிகளுக்கு ஒரு முக்கிய நற்செய்தி

விவசாயிகளுக்கு ஒரு முக்கிய நற்செய்தி வெளியாகியுள்ளது. கோை வேளாண்மை விற்பனைக்குழு அறிவித்தப்படி, வரும் 09.12.2025 முதல் இ-நாம் (e-NAM) தளத்தின் மூலம் வேளாண் பொருட்களுக்கு நேரடி ஏலம் நடைபெற உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை நேரடியாக சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் வசதி கிடைக்கிறது.

25
2 நாட்கள் விலை ஏலம்

குறிப்பாக தேங்காய், தேங்காய் பருப்பு, தொட்டி போன்ற பொருட்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமையும், பாக்கு புதன் கிழமையும் விற்பனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ஏலம் காலை 11.00 மணிக்கு தொடங்கும் என்பதால், விவசாயிகள் முன்கூட்டியே பொருட்களை கொண்டு வந்து பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

35
நியாயமான விலை கிடைக்கும்

இ-நாம் முறையின் மூலம் நடுவணர்கள் இல்லாமல், நியாயமான விலையில் விளைபொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைப்பது முக்கிய சிறப்பாகும். மேலும் சரியான எடை, தரமான விலை, கமிஷன் இல்லாத பரிமாற்றம் போன்ற பல நன்மைகள் விவசாயிகளுக்கு கிடைக்கின்றன.

45
நேரடியக வங்கி கணக்கில் பணம்

விற்பனைக்குப் பிறகு பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால், விவசாயிகள் நிம்மதியாகவும் நம்பிக்கையுடனும் விற்பனையில் பங்கேற்கலாம்.

55
அதிக வருமானம் பெறும் வாய்ப்பு

இந்த திட்டம் தொண்டாமுத்தூர் விவசாயிகளுக்கு அதிக வருமானம் பெறும் வாய்ப்பை உருவாக்கும் என்பதால், அனைவரும் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மை விற்பனைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories