பிக்பாஸ் வீட்டிற்குள் மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, அவரை தற்கொலைக்கு தூண்டியது என அனைத்து காட்சிகளும் பதிவாகி இருக்கும்.
பிக்பாஸ் வீட்டின் விதிகளை மீறியதால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் கையை அறுத்து கொண்டு ஒரு நபர் தற்கொலைக்கு முயலும் அளவிற்கு, அவரை தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை என்ற கேள்வியை எழுப்பி சமூகவலைதளங்களில் விவாதித்து வருகின்றனர் இணையதள வாசிகள்.
undefined
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இந்திய தண்டனை சட்டம் 306 தற்கொலைக்கு உடந்தையாக இருப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என கூறுகிறது. அந்த வகையில் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்களும் தண்டனைக்கு உரியவர்கள் என சமூக வலைதளங்களில் வாதிட்டு வருகின்றனர். ஆனால் பிக்பாஸ் நிர்வாகமோ மதுமிதாவை வீட்டை விட்டு வெளியேற்றியதுடன் நிறுத்தி கொண்டது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பார்கள். ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டும் அரசியலமைப்பு சட்டம் செல்லுபடியாகாதா என்ற கேள்வி இணையத்தில் அதிக அளவில் எழ ஆரம்பித்துள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, அவரை தற்கொலைக்கு தூண்டியது என அனைத்து காட்சிகளும் பதிவாகி இருக்கும். அதனை மக்கள் மத்தியில் வெளியிட பிக்பாஸ் நிர்வாகம் விரும்பவில்லை என்றாலும், அதனை கொண்டு சட்ட ரீதியான விசாரணைக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்ற வலைதள வாசிகளின் வாதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பிக்பாஸ் வீட்டில் நடப்பவை எவையும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை இல்லை என்றும், என்ன நடக்கிறதோ அதையே காட்சிபடுத்துகிறோம் என்றும் தொடர்ந்து கூறி வருகின்றனர் தயாரிப்பாளர்கள். அப்படியெனில் மதுமிதாவிற்கு நடந்ததும், சட்டத்தின் விசாரணைக்கு உட்பட்டது தான் என்பது தான் பெரும்பாலானவர்களின் வாதம். எத்தனையோ விவகாரங்களில் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யும் காவல்துறை, பெரும்பாலான மக்கள் பார்க்கும் இந்த விவகாரத்திலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசப்பட்ட பல விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. என்ன செய்யப்போகிறார்கள் பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் என்பதே இணையதளவாசிகளின் கேள்வியாக உள்ளது.