மக்கள் மனதில் இருப்பதை கூறி ஐஸ்வர்யாவை கதறி அழ வைத்த விஜயலஷ்மி

Published : Sep 03, 2018, 01:05 PM ISTUpdated : Sep 09, 2018, 07:24 PM IST
மக்கள் மனதில் இருப்பதை கூறி ஐஸ்வர்யாவை கதறி அழ வைத்த விஜயலஷ்மி

சுருக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பிரமோ சமீபத்தில் வெளியாகி இருக்கிறது

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பிரமோ சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த பிரமோவில் விஜயலஷ்மி ஐஸ்வர்யா, சென்றாயன் மற்றும் மும்தாஜ் ஆகியோருடன் ஒரு இருட்டு அறையில் மணிரத்தினம் பட எஃபெக்டில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அவர் ஐஸ்வர்யாவிடம் ” உனக்கு தமிழ்நாடு பத்தி தெரியுமானு தெரியாது. எல்லாரையுமே அரவணைத்து போவது எங்க குணம் பிடிச்சு போச்சுனா தலையில தூக்கி வெச்சு ஆடுவாங்க.ஆனா முட்டளுங்க இல்ல” என கூறுகிறார்.

மேலும் கூடுதல் டோஸ் கொடுத்திருப்பதாகவே கூறி இருக்கிறார் விஜயலஷ்மி. இந்த மீட்டிங் முடிந்து வெளியே சந்தோஷமாக துள்ளி குதித்து வந்த விஜயலஷ்மி, வெளியில் நின்று கொண்டிருக்கும் பாலாஜி , ஜனனி போன்றவர்களிடம் செம சண்டை என கூறுகிறார் . இதை கேட்டதும் ஜனனியின் முகம் பிரகாசிக்கிறது. தொடர்ந்து வரும் காட்சிகளில் ஐஸ்வர்யா கதறி அழுகிறார். அவரை யாஷிகா சமாதானம் செய்கிறார்.

தமிழ்நாட்டு ஜனங்க முட்டாள் இல்லை என விஜயலஷ்மி கூறியதை இடையே கூறிப்பிட்டு அழும் ஐஸ்வர்யா விஜயலஷ்மி கொடுத்திருக்கும் டோஸில் கதிகலங்கி போய்விட்டார் என்று தான் கூற வேண்டும். ஐஸ்வர்யாவிடம் விஜயலஷ்மி பேசியது சரியான விஷயம் தான். ஆனால் ஒருவரை கண்டித்து விட்டு வரும் போது , வெளியில் அவர் காட்டும் மகிழ்ச்சி சரியானதாக படவில்லை.

பிறரை அழ வைத்து அதை பார்த்து சிரிப்பதும் தமிழ் மக்களுக்கு பிடிக்காது என்பதும் , விஜயலஷ்மியின் நினைவில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது ஒருவேளை ஐஸ்வர்யா மீது மக்கள் இரக்கம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே , இவை எல்லாம் நடக்கிறதோ என்றும் ஒரு சந்தேகம் மனதில் எழுகிறது. இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் ஐஸ்வர்யா இடம் பெற்றால் , அவர் கண்டிப்பாக எலிமினேட் ஆகிவிடுவார். அதனால் தான் மக்கள் மனதை மாற்ற பிக் பாஸ்  அவருக்காகவே இப்படி புது வழியில் போராடுகிறார் போல.

PREV
click me!

Recommended Stories

பிக்பாஸ் போட்டி குறித்து கவின் பரபரப்பு கடிதம்...!! பல முக்கிய தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சி...!!
சேரப்பா நீங்க வேறப்பா தான்... சமாதான நாடகம் வீணா போச்சே! கிழிந்து கந்தலான மது, சேரன் முகத்திரை...