தவறை பக்குவமாக சுட்டிக்காட்டிய வையாபுரி! புரிந்து கொள்ளாமல் கோபப்படும் மும்தாஜ்...

By sathish kFirst Published Sep 11, 2018, 3:45 PM IST
Highlights

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விருந்தினராக நுழைந்திருக்கும் சினேகன், காயத்திரி சுஜா, வையாபுரி, ஹாரதி போன்ற முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள், தற்போது அங்கு இருக்கும் போட்டியாளர்களுக்கு தங்களாள் ஆன அறிவுறையை கூறிவருகின்றனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விருந்தினராக நுழைந்திருக்கும் சினேகன், காயத்திரி சுஜா, வையாபுரி, ஹாரதி போன்ற முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள், தற்போது அங்கு இருக்கும் போட்டியாளர்களுக்கு தங்களாள் ஆன அறிவுறையை கூறிவருகின்றனர். 

இந்த 7 நாட்களுக்கும் பிக் பாஸ் வீட்டை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் இவர்கள் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் பிரமோவிலேயே மும்தாஜுடனான மோதலை ஆரம்பித்துவிட்டனர்.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் பிரமோவிலும் கூட மும்தாஜ் கோபப்படுவது மாதிரியான கட்சிகளே இடம்பெற்றிருக்கின்றன. இந்த பிரமோவின் போது தமிழில் சொல்லப்படும் சில பழமொழிகளை கூறி , அது எந்த போட்டியாளருக்கு பொருந்தும் என கூறி இருக்கிறார் சினேகன். 

அப்போது , மும்தாஜ் தனக்கு சாதகமான டாஸ்குகளை மட்டுமே செய்வதை பற்றியும், உடல்நிலையை காரணம் காட்டி அடிக்கடி எஸ்கேப் ஆவது பற்றியும் பக்குவமாக எடுத்து சொல்கிறார் வையாபுரி. 

பிக் பாஸ் முதல் சீசனில் அவரும் உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோதும் கூட, பல டாஸ்குகளை முயற்சி எடுத்து செய்திருந்தார். இதனால் இந்த இடத்தில் மும்தாஜுக்கு அறிவுறை சொல்ல சரியான ஆள் தான் வையாபுரி. ஆனாலும் மும்தாஜ் அதை கேட்காமல் கோபமாக அந்த இடத்தை விட்டு செல்கிறார். 

அதே போல ”பாம்பின் கால் பாம்பறியும்” எனும் பழமொழிக்கு யாஷிகாவை உதாரணமாக கூறி இருக்கிறார் சினேகன்.
ஐஸ்வர்யா அடுத்து என்ன செய்வார் என யாஷிகா தான் அறிவார் என விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார். அதே போல தவளை தன் வாயல் கெடும் என்பதற்கு ஐஸ்வர்யாவை உதாரணமாக சொல்லி இருக்கிறார் சினேகன். இதை எல்லாம் கேட்டு யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் கோபப்படாமல் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் மும்தாஜ் மட்டும் அவர் செய்த தவறை சுட்டி காட்டியதற்கே கோபப்படுகிறார். ஆரம்பத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்திருந்த மும்தாஜ் தற்போது அவரது நடவடிக்கைகளாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் தோற்றுக் கொண்டிருக்கிறார்.
 

click me!