எனர்ஜிடிக்! லவ்லி! கேசுவல்! ஜீ தமிழ் ரஜினி பேட்டியின் தொகுப்பு!

By sathish kFirst Published Nov 7, 2018, 9:19 AM IST
Highlights

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 2.0 திரைப்படத்தின் சேட்டிலைட உரிமத்தை பெற்றுள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நடிகர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

 எனக்கு எப்போதுமே பிடித்த பாடல் போனால் போகட்டும் போடா என்பது தான். கன்டக்டரா இருந்தபோது மாசம் 350 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தேன். திடீரென லட்சம் லட்சமாக பணம் வந்த போது என்னை நான் மிக உயர்வாக நினைத்துக் கொண்டேன். நாம் மிகவும் ஸ்பெசலான ஒரு மனிதன் என்று கருதினேன். ஆனால் சில வருடங்களில் தான் அப்படி இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.

அபூர்வ ராகங்களில் நான் முதல் காட்சியில் தோன்றிய போது ஒரு கதவை திறந்து கொண்டு வருவது போல் நடித்திருப்பேன். அந்த கதவு என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. படங்களில் நடித்து பிரபலமான பிறகு அந்த வீட்டிற்கு சென்று நான் அந்த கதவை பார்த்துவிட்டு வருவேன். அந்த வீடு அடையாறில் இருந்தது. பின்னர் ஒரு நாள் அந்த வீடு விற்பனைக்கு வருவதாக சொன்னார்கள்.

எப்படியாவது அந்த வீட்டை வாங்கிவிடுவது என்கிற முடிவுக்கு வந்தேன். ஆனால் நான் பதில் சொல்வதற்கு முன்னர் அந்த வீட்டை வேறு ஒருவர் வாங்கிவிட்டார். அதன் பிறகு அந்த வீட்டை பற்றி நான் நினைத்தது இல்லை. எனக்கு மாறுவேடம் போட்டுக் கொண்டு மக்களோடு மக்களாக சென்று படம் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அந்த வகையில் பெங்களூரில் ஒரு முறை படத்திற்கு சென்று இருந்தேன்.

படம் முடிந்த வெளியே வந்த போது பயங்கர கூட்டம். என் கார் ரொம்ப தொலைவில் இருந்தது. திடீரென ஒருவன் தலைவா என்று கத்திவிட்டான். நான் மிரண்டு போய்விட்டேன். இந்த கூட்டத்தில் நம்மை அடையாளம் கண்டு கொண்டால் என்ன ஆகும் என்று திணறிப்போனேன். என்ன செய்வது என்றே தெரியாமல் ஒரு ஆட்டோவை பிடித்து அவசர அவசரமாக வீட்டுக்கு சென்றேன். பிறகு தான் தெரிந்தது அந்த நபர் என்னை தலைவா என்று கூப்பிடவில்லை என்று.

இதே போல் மாறுவேடம் போட்டுக் கொண்டு என் நண்பருடன் கோவிலுக்கு சென்று இருந்தேன். அதாவது ஒரு வயதான முதியவர் போல் வேடம் போட்டு இருந்தேன். அந்த வேடத்தில் பார்க்க நான் பிச்சைக்காரன் போல் இருப்பேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் என்னையே ஏற இறங்க பார்த்தார். எனக்கு பயமாகிவிட்டது. பிறகு என் பக்கத்தில் வந்த ஒரு 10 ரூபாய் கொடுத்தார்.

நான் அந்த பத்து ரூபாயை பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டேன். பிறகு சாமி கும்பிட்டு முடித்துவிட்டு செல்லும் போது 200 ரூபாயை உண்டியலில் போட்டேன். அததையும் அந்த பெண் பார்த்துவிட்டார். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, நான் அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன். நான் திரையுலகில் அறிமுகம் ஆன காலத்தில் கமல் உச்சத்தில் இருந்த நடிகர்.
   

இளம் பெண்கள் கமல் மீது பைத்தியமாக இருப்பார்கள். நானே கமலை அன்னாந்து தான் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு முறை ஷீட்டிங் முடிந்த பிறகு நான் செல்வதற்கு கார் இல்லை. என்னை கமலுடன் செல்லுமாறு கூறினார்கள். எனக்கு மிகுந்த படபடப்பாகிவிட்டது. பிறகு கமல் அருகில் அமர்ந்த பிறகு என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன், நாம் கமல் அருகில் தான் இருக்கிறோராமா என்று? அந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தார் கமல்.

தற்போதும் கூட கமல் அதே உச்சத்தில் தான் இருக்கிறார். நான் அவரை முந்திவிட்டேன் என்று கூறுவதுஎல்லாம் பைத்தியாக்காரத்தனம். கமல் அந்த உச்சத்தில் எப்போதும் இருப்பார். இவ்வாறு பல்வேறு விஷயங்களை ரஜினி பகிர்ந்து கொண்டார்.

click me!