தமிழ், தெலுங்கில் உருவாகும் சிறுத்தை சிவாவின் அடுத்த படம்! கெஸ்ட் ரோல் யார் தெரியுமா?

Published : Aug 31, 2018, 01:48 PM ISTUpdated : Sep 09, 2018, 08:09 PM IST
தமிழ், தெலுங்கில் உருவாகும் சிறுத்தை சிவாவின் அடுத்த படம்! கெஸ்ட் ரோல் யார் தெரியுமா?

சுருக்கம்

இவர்களுடைய கூட்டணியை அஜித் ரசிகர்களே வெறுக்கும் அளவிற்கு இவர்களது கூட்டணி அடுத்து அடுத்து இணைந்து வந்தது.

ஒளிப்பதிவாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் சிவா. அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களை தெலுங்கில் இயக்கிவிட்டு 'சிறுத்தை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சிறுத்தை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழில் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார்.

தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான அஜித்தை வைத்து இயக்க ஆரம்பித்த இயக்குனர் சிவா வீரம், வேதாளம், விவேகம் என அடுத்தடுத்த நடிகர் அஜித் அவர்களை வைத்தே இயக்கிவந்தார்.இவர்களுடைய கூட்டணியை அஜித் ரசிகர்களே வெறுக்கும் அளவிற்கு இவர்களது கூட்டணி அடுத்து அடுத்து இணைந்து வந்தது. இந்நிலையில் அஜித் அவர்களின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்குகிறார் என்ற செய்தி அஜித் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. அந்த திரைப்படத்திற்கும் அவருடைய பாணியில் 'v என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் 'விசுவாசம்' என்று தலைப்பிட்டுள்ளார் சிவா.

இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கவுள்ள இப்படம் தமிழ், தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்தில் தெலுகு ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் நடிகர் அஜித் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

நீலாம்பரி போல் திமிர் காட்டிய சாண்ட்ரா... படையப்பாவாக மாறி பதிலடி கொடுத்த கானா வினோத்..!
முதன்முறையாக வீட்டு தலை ஆன கானா வினோத்... இந்த வார பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கியது யார்... யார் தெரியுமா?