முரட்டு குத்து யாஷிகாவுடன் இருட்டு அறையில் செல்ஃபி... விளக்கம் சொல்லி எஸ்கேப் ஆன ஆரவ்

Published : Sep 18, 2018, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 09:29 AM IST
முரட்டு குத்து யாஷிகாவுடன்  இருட்டு அறையில் செல்ஃபி... விளக்கம்  சொல்லி எஸ்கேப் ஆன ஆரவ்

சுருக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உச்ச கட்ட புகழையும், ரசிகரகளையும் சம்பாதித்தவர் ஓவியா. ஓவியாவின் மூலம் அதிகம் பிரபலமானவர் ஆரவ். ஆரவ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெற்றி பெற கூட ஓவியா தான் ஒருவகையில் காரணம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உச்ச கட்ட புகழையும், ரசிகரகளையும் சம்பாதித்தவர் ஓவியா. ஓவியாவின் மூலம் அதிகம் பிரபலமானவர் ஆரவ். ஆரவ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெற்றி பெற கூட ஓவியா தான் ஒருவகையில் காரணம். ஆரவ் மற்றும் ஓவியா இடையே ஆன காதல் அதன் பின்னார் நடந்த பிரச்சனைகள் இது எல்லாம் இப்போது பழைய கதை ஆகிவிட்டது. 

ஆனால் ஆரவ் எப்போது கையில் சிக்கினாலும் விமர்சிக்க காத்திருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-ல் கலந்து கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்தை பிக் பாஸ் ரசிகரகளுக்கு நன்றாக தெரியும். அவரும் ஆரவும் இணைந்து எடுத்துக்கொண்ட மிக நெருக்கமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருந்தது. 

ஆரவுக்கும் யாஷிகாவும் என்ன சம்பந்தம் என இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு கேள்வி எழுப்பி இருந்தனர் அவரின் ரசிகர்கள்.

அந்த கேள்விக்கு ஆரவ் தற்போது பதிலளித்திருக்கிறார். அந்த பதிலில் எனக்கு அவர் யார் என்றே தெரியாது. நான் ஹோட்டலில் இருந்த போது என்னிடம் வந்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா என அனுமதி கேட்டார். அப்படி எடுத்து கொண்ட செல்ஃபி தான் இணையத்தில் வெளியான அந்த புகைப்படம். மற்றபடி யாஷிகா யார் என்பது எனக்கு அப்போது தெரியாது. 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு தான் யாஷிகா யார் என்பதை நான் தெரிந்து கொண்டேன் என கூறி இருக்கிறார் ஆரவ். இந்த புகைப்படத்தை வைத்து யாஷிகாவும் ஆரவும் காதலர்கள்  என்றெல்லாம் கூட புரளி கிளம்பி இருந்தது. ஆரவின் இந்த பதில் இப்போது அந்த புரளிகளுக்கு பதிலாக அமைந்திருக்கிறது. பிக் பாஸுக்கு வரும் முன்னர் யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படத்தில் நடித்ததன் மூலம், பிரபலமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

பிக்பாஸ் போட்டி குறித்து கவின் பரபரப்பு கடிதம்...!! பல முக்கிய தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சி...!!
சேரப்பா நீங்க வேறப்பா தான்... சமாதான நாடகம் வீணா போச்சே! கிழிந்து கந்தலான மது, சேரன் முகத்திரை...