மாற்றுத்திறனாளி சிறுமியை பலவந்தமாக கற்பழித்த காமவெறி இளைஞர்..! அதிரடி தண்டனையளித்த நீதிமன்றம்..!

Published : Oct 24, 2019, 11:42 AM ISTUpdated : Oct 24, 2019, 11:44 AM IST
மாற்றுத்திறனாளி சிறுமியை பலவந்தமாக கற்பழித்த காமவெறி இளைஞர்..! அதிரடி தண்டனையளித்த நீதிமன்றம்..!

சுருக்கம்

கோவை அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே இருக்கும் கிட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ்(27). இவர் கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். கனகராஜ் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயது சிறுமியான இவர் மாற்றுத் திறனாளி ஆவார்.

கனகராஜிற்கு, சிறுமி ரேவதி மீது ஆசை இருந்திருக்கிறது. இந்த நிலையில் ரேவதி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இதை நோட்டமிட்ட கனகராஜ், சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் பேச்சு கொடுத்த கனகராஜ், திடீரென எல்லை மீறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி ரேவதி, கனகராஜை வீட்டை விட்டு வெளியே போக சொல்லியிருக்கிறார். ஆனால் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் கனகராஜ்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கனகராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கனகராஜுக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பாக 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!