ஊரடங்கிலும் பயங்கரம்..! வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மர்மகும்பல்..!

Published : Apr 23, 2020, 03:42 PM ISTUpdated : Apr 23, 2020, 03:46 PM IST
ஊரடங்கிலும் பயங்கரம்..! வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மர்மகும்பல்..!

சுருக்கம்

முதற்கட்ட விசாரணையில் பாலாஜி மீது காவல்துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அப்பகுதி வாலிபர்களிடம் அவர் பலமுறை தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் காரணமாக முன்விரோதம் ஏற்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலாஜியை படுகொலை செய்திருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே இருக்கும் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பாலாஜி(24). பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். நேற்று பாலஜி தனது வீட்டில் இருந்து அங்கிருக்கும் சோலையம்மன் நகர் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று பாலாஜியிடம் தகராறு செய்துள்ளனர். பின் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்,கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு பாலாஜியை தாக்கத் தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அவரை விடாமல் துரத்திய மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் தலை,கால்,கை உள்பட பல பகுதிகளில் பலத்த காயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். பின் உடனடியாக அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவலர்கள் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாலாஜி மீது காவல்துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அப்பகுதி வாலிபர்களிடம் அவர் பலமுறை தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் காரணமாக முன்விரோதம் ஏற்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலாஜியை படுகொலை செய்திருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனிடையே கொலையாளிகளை கண்டுபிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!