இளைஞர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டது அம்பலம்..!

Published : Jun 21, 2019, 05:54 PM IST
இளைஞர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டது அம்பலம்..!

சுருக்கம்

விழுப்புரம் அருகே இளைஞர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது நண்பர்களே கொலை செய்து தூக்கில் தொங்க விட்டது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஐய்யனார், கடந்த 17-ம் தேதி கிணற்றில் தூக்குப் போட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஐய்யனார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. பின்னர், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் திருட்டு வழக்கில் தொடர்புடைய மாரிமுத்து, தனது நண்பருடன் இணைந்து ஐய்யனாரை மது அருந்த அழைத்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள 4 பேரை தேடி வருகின்றனர். மாரிமுத்துவின் மனைவி குறித்து ஐய்யனார் தவறாக பேசியதை அடுத்து அவர் கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!