வீடியோ காலில் சும்மா விளையாட்டுக்காக தூக்கில் தொங்கிய இளைஞர்...பரிதாப முடிவு...

Published : Apr 23, 2019, 10:21 AM ISTUpdated : Apr 23, 2019, 10:23 AM IST
வீடியோ காலில்  சும்மா விளையாட்டுக்காக தூக்கில் தொங்கிய இளைஞர்...பரிதாப முடிவு...

சுருக்கம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில், குடிபோதையில் செத்துச்செத்து  விளையாட விரும்பிய  இளைஞர் ஒருவர் உண்மையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில், குடிபோதையில் செத்துச்செத்து  விளையாட விரும்பிய  இளைஞர் ஒருவர் உண்மையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி அருகே திருச்சானூரில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவர் வழக்கம்போல் நேற்றுபணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். சிறந்த குடிகாரரான அவர் மூக்குமுட்ட குடித்துவிட்டு,  தனது பொழுதுபோக்கிற்காக தனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு வீடியோ கால் போட்டு  தான் தூக்கில் தொங்கவிருப்பதாகவும் அதனை லைவாக பார்க்க போனில் காத்திருக்கும்படியும் கூறியிருக்கிறார்.

எதிர்முனையிலிருந்த நண்பரோ வேண்டாம் விபரீத விளையாட்டு என்று எச்சரித்துக்கொண்டிருக்கும்போது சிவகுமாரின் ஸ்டூலில் கால்பிடி தளர சேலை அவரது கழுத்தை இறுக்க  மூச்சு விடமுடியாமல் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், சிவக்குமாரின் நண்பர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பரிதாபமான மரணங்கள் எவ்வளவு நடந்தாலும் செல்போன்கள் மூலம் விபரீத விளையாட்டுக்களில் ஈடுபடுவதை மக்கள் குறைத்துக்கொள்வதாயில்லை.

PREV
click me!

Recommended Stories

இரவு 9 மணி.. ஹோட்டலில் துப்பாக்கி சுடும் வீராங்கனை கதறல்.. நடந்தது என்ன? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்
லவ் பண்றேன்னு சொல்லி இப்படி என்னை ஏமாத்திட்டியே! ப்ளீஸ் என்ன விட்டுடு! கதறியும் விடாமல் நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்.!