17 வயது சிறுமியை திருமணம் செய்து உல்லாசம்..! போக்சோவில் வாலிபர் அதிரடி கைது..!

By Manikandan S R S  |  First Published May 24, 2020, 10:10 AM IST

சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறிய விக்னேஷ்வரன் வீட்டை விட்டு வெளியேறி வந்துவிடு, திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பிய சிறுமி கடந்த 17ம் தேதி வாலிபருடம் மாயமானார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். 


கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(24). அந்தப் பகுதியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதான சிறுமிக்கும் விக்னேஷ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாளடைவில் நெருக்கமாகி காதலிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

Latest Videos

இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறிய விக்னேஷ்வரன் வீட்டை விட்டு வெளியேறி வந்துவிடு, திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பிய சிறுமி கடந்த 17ம் தேதி வாலிபருடம் மாயமானார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கும் காணாததால் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவலர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். காவல்துறையின் விசாரணையில் சிறுமியை விக்னேஷ்வரன் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று திருமணம் செய்ததுடன், பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சி விரைந்த போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டனர். சிறுமிக்கு 17 வயதே நிரம்பியிருப்பதால் சட்டப்படி இத்திருமணம் செல்லாது. எனவே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விக்னேஷ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

click me!