ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் ஓயாமல் உல்லாசம்..கல்யாணம் செய்யாமல் எஸ்கேப்பான இளைஞரின் நிலைமையை பார்த்தீங்களா?

Published : Jun 16, 2022, 10:45 AM IST
ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் ஓயாமல் உல்லாசம்..கல்யாணம் செய்யாமல் எஸ்கேப்பான இளைஞரின் நிலைமையை பார்த்தீங்களா?

சுருக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கிராமத்தை சேர்ந்தவர் சேவியர் என்பவரின் மகன் ஜோஸ்வா (28). ஓட்டுநராக வேலைபார்த்து வந்தார். இவர் பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் போச்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கிராமத்தை சேர்ந்தவர் சேவியர் என்பவரின் மகன் ஜோஸ்வா (28). ஓட்டுநராக வேலைபார்த்து வந்தார். இவர் பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக  ஆசைவார்த்தை கூறி ஜோஸ்வா, அந்த இளம்பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், ஜோஸ்வா நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததையடுத்து அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று வற்புறுத்தியுள்ளார். அதற்கு ஜோஸ்வா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல், கற்பழித்தல், கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வாவை கைது செய்தனர். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி