காதலிக்கு கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து உல்லாசம் அனுபவித்த காதலன்... பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!!

Published : Mar 16, 2019, 06:47 PM ISTUpdated : Mar 16, 2019, 07:09 PM IST
காதலிக்கு கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து உல்லாசம் அனுபவித்த காதலன்...  பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!!

சுருக்கம்

பொள்ளாச்சி பாலியல் நாசவேலை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.   

பொள்ளாச்சியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்போடு நகர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் நாகை மாவட்டத்திலும்  இளம் பெண்களை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாகை வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்த சுந்தர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுந்தர் அந்த கடைக்கு ரீசார்ஜ் செய்வதாக சொல்லி அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சுந்தருக்கும்  அந்த இளம் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில்  காதலர்களாக மாற்றி உள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், காதலன் சுந்தரின் நடவடிக்கையில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் சுந்தரிடமிருந்து விலகியே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் இளம்vபெண்ணை மீண்டும் தன்னுடன் பழக வைக்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து சுந்தர் மீண்டும் அந்த  பெண்ணை சந்தித்து சாமர்த்தியமாக பேசி மயக்கியிருக்கிறார்.  

இந்நிலையில் காதலியிடம் நாம் காரைக்கால் கோவிலுக்கு சென்று வருவோம் என்று கூறி அழைத்துள்ளார். காதலன் மேல் இருந்த நம்பிக்கையில் அந்த  பெண்ணும் சுந்தருடன் வர சம்மதித்துள்ளார்.

இதையடுத்து தனது காதலியை காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு அறையில் தங்கியுள்ளனர். அப்போது குளிர்பானம் வாங்கி வந்த சுந்தர் அதை காதலியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த குளிர்பானத்தை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். தான் குளிர்பானத்தில் கலந்து கொடுத்த மயக்க மருந்தால் காதலி மயக்கமடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சுந்தர்  அந்த பெண்ணுக்கு தெரியாமலேயே உல்லாசம் அனுபவித்துள்ளார் . அதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தாயா எனக் கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது சுந்தர் தன் செல்போனில் பதிவு செய்த பதிவுகளை காட்டி இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். ஆனால் தன் செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை பற்றி இளம்பெண்ணிடம் கூறி அடிக்கடி தனியாக வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக  சொல்லப்படுகிறது.

தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதை அறிந்து அவமானமும் அடைந்த இளம்பெண் உடனடியாக இதுபற்றி கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரணை  நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சுந்தர் பல  பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி  எடுத்து வைத்திருந்துள்ளதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் போனில் இருந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Breaking: தூத்துக்குடி மாணவி கொ**லை வழக்கு..! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடிa
ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!