எந்த நேரமும் செல்போனில் கடலை போட்ட மனைவி.. ஆத்திரத்தில் கழுத்தை கரகரவென கத்தியால் அறுத்துக் கொன்ற கணவன்..!

Published : Oct 14, 2020, 06:22 PM IST
எந்த நேரமும் செல்போனில் கடலை போட்ட மனைவி.. ஆத்திரத்தில் கழுத்தை கரகரவென கத்தியால் அறுத்துக் கொன்ற கணவன்..!

சுருக்கம்

ஓசூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொலை செய்த அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

ஓசூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொலை செய்த அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் மணிகண்டன் (30). ஓசூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த சிந்துஜா(27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் ஓசூர் லட்சுமி நாராயண நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், மணிகண்டனுக்கு மனைவி சிந்துஜா நடத்தையின் மீது சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மணிகண்டன் சிந்துஜாவிற்கு இடையே தகராறு எற்பட்டபோது ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் சிந்துஜாவின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் கொலை செய்துள்ளார். 

இதனையடுத்து, அட்கோ காவல் நிலையத்தில் மணிகண்டனம் சரணடைந்தார். இதனையடுத்து, மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தில் கடந்த சில மாதங்களாகவே சிந்துஜா அடிக்கடி செல்போனில் பேசிவந்தார். இதனால், அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. பேசுவதை நிறுத்தும் படி பலமுறை சொல்லியும் அவள் கேட்கவில்லை. இதனால், ஏற்பட்ட தகராறில்  ஆத்திரமடைந்த நான் அவரை கழுத்தறுத்து கொலை செய்தேன் என கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்