காணாமல் போன 2 வது மனைவி... பாத்ரூமில் ரத்த கறைகள், ஹாக்கி மட்டை!! ஹாட் பீட்டை எகிறவைக்கும் திக் திக் மர்மம்...

By sathish kFirst Published Aug 29, 2019, 5:02 PM IST
Highlights

சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் காணாமல் போனது குறித்தும், அவரது வீட்டில் ரத்த கறைகள் இருப்பதும் தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் காணாமல் போனது குறித்தும், அவரது வீட்டில் ரத்த கறைகள் இருப்பதும் தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர்.

கன்னங்குறிச்சி அடுத்துள்ள சந்திரன் கார்டன் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், ஜவுளி தொழில் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்செல்வி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எட்டாம் வகுப்பு பயிலும் மகன் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் செவ்வாய் கிழமை மாலை கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கணவர் ஹரிகிருஷ்ணன், தனது வீட்டில் தனியாக இருந்த மனைவி காணாமல் போயுள்ளாதாகவும், வீடு திறந்து இருப்பதுடன், குளியல் அறையில் ரத்தக்கறைகள் இருப்பதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதனால், போலீசார் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீட்டின் குளியலறையில் உள்ள சுவற்றில் ரத்தக் கறைகள் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாது சுவற்றில் விமல் என்றும் அதன் கீழே காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் எனவும் ரத்தத்தில் எழுதப்பட்டுள்ளன. ரத்தம் தோய்ந்த நிலையில் ஹாக்கி மட்டை ஒன்றும் இருப்பதும்  போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது.

வீட்டில் தனியாக இருந்த தமிழ்செல்வி கடுமையாக தாக்கப்பட்டு கடத்தப்பட்டாரா  அல்லது ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்ட அவருக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஹரிகிருஷ்ணன் பைனாஸ் விடும் நபர்களிடம் பணம் வசூலிக்கும் வேலையை, அன்னதானப்பட்டியை சேர்ந்த விமல் என்பவர் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சுவற்றில் அவரது பெயர் ரத்தத்தில் எழுதப்பட்டிருந்தால், அவரது மீது சந்தேகம் கொண்டுள்ள போலீசார் அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கணவர் ஹரிகிருஷ்ணனும் போலீசாரின் சந்தேக வளையத்திற்குள் இருப்பதால் அவரிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறது. தமிழ்செல்வியின்உறவினர்கள் சிலரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பான கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன், பின்னர் விடுதலையாகி இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது.

click me!