கோவையில் கொடூரம்... ஓட்டலில் ரூம் போட்டு காத்திருந்த ‘திடீர்’ காதலனால் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை...!

Web Team   | Asianet News
Published : Feb 22, 2021, 05:35 PM IST
கோவையில் கொடூரம்... ஓட்டலில் ரூம் போட்டு காத்திருந்த ‘திடீர்’ காதலனால் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை...!

சுருக்கம்

அது எல்லாம் போதாது என்று ஆன்லைன் கேம் மூலமாக அறிமுகமாகும் முகம் தெரியாத நபர்களுடன் நட்பு பாராட்டுவதும், அது நாளடைவில் காதலாக மாறுவதும் அதிகரித்து வருகிறது.   

ஆன்லைன் யுகத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களையும் கடந்து இளம் தலைமுறையினர் காதலை வளர்க்க டேட்டிங் ஆப்கள் கூட கூகுளில் குவிந்து கிடக்கிறது. அது எல்லாம் போதாது என்று ஆன்லைன் கேம் மூலமாக அறிமுகமாகும் முகம் தெரியாத நபர்களுடன் நட்பு பாராட்டுவதும், அது நாளடைவில் காதலாக மாறுவதும் அதிகரித்து வருகிறது. 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த கொட்டாரக்கரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் இவருடைய மகள் தேவிகா. அங்குள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். தேவிகாவிற்கும், கொச்சியைச் சேர்ந்த ஹரிஷ் என்ற நபருக்கும் ஆன்லைன் கேம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த அறிமுகம் நாளடைவில் நட்பாக மாற இருவரும் போனில் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர். 

ஆரம்பத்தில் நட்பாக பழகிய தேவிகாவும், ஹரிஷும் நாளடைவில் காதலர்களாக மாறியதாக தெரிகிறது. 2019ம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனியாக சந்திக்க வேண்டும் வரவழைத்த ஹரிஷ், தேவிகாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவிகா பெற்றோரிடம் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த அவர்களோ கேரளாவில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த வழக்கு தற்போது கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு, முறையாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணயை தொடங்கியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!