நீ சாகபோற.. உன் மனைவி 2வது கல்யாணம் பண்ணபோறா.. வெறுப்பேற்றிய இளைஞனை அடித்தே கொன்ற கணவன்.

Published : Jul 08, 2022, 10:04 PM IST
நீ சாகபோற.. உன் மனைவி 2வது கல்யாணம் பண்ணபோறா.. வெறுப்பேற்றிய இளைஞனை அடித்தே கொன்ற கணவன்.

சுருக்கம்

தன்னையும் தன் மனைவியை குறித்தும் வதந்தி பரப்பினார் என்ற சந்தேகத்தின் பெயரில் இளைஞனை கணவன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது 

தன்னையும் தன் மனைவியை குறித்தும் வதந்தி பரப்பினார் என்ற சந்தேகத்தின் பெயரில் இளைஞனை கணவன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா  சீதாராம்புரம் கொத்தவந்தேனா, சென்டரில் வசிப்பவர் கதம்பாபு அதே பகுதியில் வசிக்கும்  ரத்னலா என்பவரை கொலை செய்துள்ளார். இது குறித்து சூர்யாறு  பேட்டை  போலீசார் தெரிவித்த தகவல் பின்வருமாறு:- குற்றம்சாட்டப்பட்ட கதம்பாபு நெல்லூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஆவார்.

அவரது குடும்பம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயவாடாவில் குடியேறியது, கதம் பாபுவின் குடும்பம் சீதா ராமாபுரம் கொத்தவந்தனை மையவாடியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறது. இந்நிலையில் ரத்னலா என்பவர் குடும்பமும் அதே பகுதியில் வசித்து வருகிறது, ரத்னலா அதே பகுதியில் கொய்யாப்பழம் விற்பனை செய்து வருகிறார். கதம் பாபு பெயிண்டர் வேலை செய்து வருகிறார், சில நேரங்களில் ராபிட்டோ ஃபைக் ஓட்டியும் வந்தார், சில நாட்களுக்கு முன் கதம் பாபு ரத்னலா விடம் இருசக்கர வாகனத்தை தரும்படி கேட்டுள்ளார். நிதி நெருக்கடி காரணமாக வாகனம் இல்லை என்றும், வாழ்க்கை நடத்த போதிய வருமானம் இல்லை என்பதால் ஜாதகம் பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருகிலுள்ள ஜோதிடரை அணுகியுள்ளனர். கதம் பாபுவின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் விரைவில் கதம் பாபு இறந்து விடுவார் என்றும், அதன்பிறகு அவரது மனைவி மீண்டும் திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

அன்று மாலை மன உளைச்சலில் இருவரும் மது அருந்தினர், இந்நிலையில் ஜோதிடர் கூறியதை அப்பகுதி மக்கள் உறவினர்களிடம்  ரத்தன்லா கூறி கிண்டல் செய்து வந்ததாக பாபுவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த கதம் பாபு இருவரும் மது அருந்திக் கொண்டிருந்த போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரத்தன்லாவை கொடூரமாக குத்தி கொலை செய்தார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர், தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இனி அடுத்து கதம்பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். உயிரிழந்த ரத்தன்லாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி