வசீகர குரலில் காதல் சொட்ட சொட்ட பேசிய பெண் சப்இன்ஸ்பெக்டர்..!! கொள்ளையனால் நடந்த பலான சம்பவம்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 2, 2019, 3:09 PM IST
Highlights

பால்கிஷன் காதல் சொட்ட சொட்ட பேசினார் .  அதைத்தொடர்ந்து இருவருக்குமான  நட்பு காதலானது,  ஒரு கட்டத்தில்  உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார் சப் இன்ஸ்பெக்டர்.   பெண் தேடிக் கொண்டிருந்த பால் கிஷனுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. 

கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்  கைது செய்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது .  உத்திரபிரதேசம் மாநிலம் மஹோப்பா மாவட்டத்தில் பிஜோரி கிராமத்தை சேர்ந்தவர் பால்கிஷன் பல்வேறு கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.  நீண்ட நாட்களாக போலீசுக்கு தண்ணி காட்டி வந்தவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு  வந்தார்.  

பால்கிஷனை  கைது செய்ய போலீசார் பல்வேறு உத்திகளைக் கையாண்டனர் ஆனால் அதில் எதிலும் பலன் இல்லை . இதற்கிடையில் பால் கிஷனின் செல்போன் நம்பரை போலீசார் கண்டுபிடித்தனர்.  அதேநேரத்தில் பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .  இதனால் பெண் ஊழியர் ஒருவரின் பெயரில் சிம்கார்டு வாங்கினார் . 

அந்த நம்பர் மூலம் ஒரு  பெண் சப் இன்ஸ்பெக்டர்,  பால்கிஷனுக்கு போன் செய்தார் பிறகு சாரி , ராங் நம்பர்  என  வைத்துவிட்டார்.  இதனால்  உஷாரான பாலகிஷன் போலீசார் உளவு பார்க்கிறார்களோ என நினைத்து ஆப் மூலம் அந்த நம்பரை பரிசோதித்தார் .  அது ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவரின் நம்பர் என தெரியவந்தது .  பிறகு சில நாட்கள் கழித்து அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் அதே நம்பருக்கு போன் செய்தார், ஒரு பெண் பேசியதால்   பால்கிஷன் காதல் சொட்ட சொட்ட பேசினார் .  அதைத்தொடர்ந்து இருவருக்குமான  நட்பு காதலானது,  ஒரு கட்டத்தில்  உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார் சப் இன்ஸ்பெக்டர்.   பெண் தேடிக் கொண்டிருந்த பால் கிஷனுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.  

முதலில் நேரில் சந்திக்கலாம் என கேட்டார் பால்கிஷன்,  சரியென கூறிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் அங்குள்ள ஒரு கோயிலுக்கு வருமாறு கூறினார்.  அதன்படி தன் எதிர்கால மனைவியை பார்க்கப்போகும் ஆசையில் பால்கிஷன் கோவிலுக்கு வந்தார். அங்கு ஏற்கனவே மாப்டியில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் அங்கு சப்-இன்ஸ்பெக்டர் வரவில்லை .  பிறகு அந்த இடத்திற்கு வந்த பால்கிஷன் தான் சப் இன்ஸ்பெக்டரின் நம்பருக்கு போன் செய்ய,  அங்கிருந்த போலீஸார் அவரை அலேக்காக தூக்கினர். வித்தியாசமான முறையில் போலீசார் குற்றவாளியை கைது செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

click me!