வீட்டில் தனியாக இருந்த ஆண்டியை வாயை பொத்தி கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி.. இறுதியில் என்ன நடந்த ட்விஸ்ட்.!

By vinoth kumar  |  First Published May 16, 2023, 1:22 PM IST

நாமக்கல் மாவட்டம் சுல்தான்பேட்டை ஜேடர் தெருவைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் லாரி டிரைவர். வெளிமாநிலத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். 


வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் சுல்தான்பேட்டை ஜேடர் தெருவைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் லாரி டிரைவர். வெளிமாநிலத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த பெண் தன் குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அதிகாலையில் அந்த பெண் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது  முகமூடி அணிந்த வந்த 5 பேர் அந்த பெண்ணை வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். 

Tap to resize

Latest Videos

அவர்களிடம் ஒருவழியாக தப்பித்து சாலையில் ஓடிவந்த அந்த பெண் என்னை காப்பாத்துங்கள் என்று அலறி கூச்சலிட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் என்ன ஆச்சோ எது ஆச்சோ அதிர்ச்சியில் வெளியே ஓடிவந்துள்ளனர். இதனை கண்ட மூகமுடி அணிந்திருந்த மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர  வாகனத்தில் தப்பித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் வேலைக்கு வெளியூர் சென்றுள்ளார் என்ற விஷயத்தை அறிந்தவர்கள் தான் கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

click me!