மெரினாவில் நள்ளிரவில் பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் பறிப்பு! சினிமா பாணியில் சேஸிங் செய்து பிடித்த போலீஸ்

Published : Dec 12, 2022, 10:42 AM ISTUpdated : Dec 12, 2022, 10:56 AM IST
மெரினாவில் நள்ளிரவில் பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் பறிப்பு! சினிமா பாணியில் சேஸிங் செய்து பிடித்த போலீஸ்

சுருக்கம்

சென்னை மெரினா கடற்கரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது. இரவு எத்தனை மணிக்கு வேண்டுமானாலும், மெரினாவுக்கு வந்து செல்லும் அளவுக்கு பாதுகாப்பான பகுதியாக உள்ளது. 

சென்னை மெரினா கடற்கரையில் பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு நகை, பணம் பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்ற 4 பேரில் ஒருவரை போலீசார் விரட்டி சென்று பிடித்துள்ளனர். 

சென்னை மெரினா கடற்கரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது. இரவு எத்தனை மணிக்கு வேண்டுமானாலும், மெரினாவுக்கு வந்து செல்லும் அளவுக்கு பாதுகாப்பான பகுதியாக உள்ளது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை அருகே பட்டினபாக்கம் வரை செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் ஒரு பெண் ஆட்டோவில் இருந்துள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த 4 பேர் மழைக்காரணமாக ஒதுங்கியுள்ளார். சற்று எதிர்பாராத வகையில் திடீரென அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து அவர் அணிந்திருந்த நகை, பணத்தை பறித்துக்கொண்டு தப்பித்து ஓடினர். 

இதையும் படிங்க;- ஒரே இரவில் இரண்டு முறை உல்லாசத்துக்கு அழைத்த கணவர்.. மறுத்த மனைவி.. காமவெறியில் நடுஇரவில் நடந்த பயங்கரம்.!

இதனையடுத்து, அந்த பெண் அலறி கூச்சலிட்டுள்ளார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த கும்பரை சினிமா பாணியில் விரட்டி சென்றனர். இதில், 3 பேர் தப்பித்துவிட்ட நிலையில் ஒருவர் கடலுக்கு குதித்து தப்பி முயன்றுள்ளார். அப்போதுது, போலீசாரும் கடலுக்குள் குதித்து அந்த நபரை சிங்கம் பட சூரியாவை  போல் சட்டையை பிடித்து இழுத்து வந்துள்ளனர். 

அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அயனாவரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடி 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க;-  ஆண்டி, இளம்பெண்கள் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ.. நைட்டில் ரூமில் தனியாக இளைஞர் செய்த காரியம்.!

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!