பேருந்தில் கையை நீட்டி சில்மிஷம் செய்து தொந்தரவு.. இனி ஒரே ஒரு குத்து தான்.. வீரப்பெண் செய்த காரியம்..!

Published : Apr 03, 2022, 10:30 PM IST
பேருந்தில் கையை நீட்டி சில்மிஷம் செய்து தொந்தரவு.. இனி ஒரே ஒரு குத்து தான்.. வீரப்பெண் செய்த காரியம்..!

சுருக்கம்

அரசு பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்து உறங்குவது போல் நடித்து பாலியல் சேட்டையில் ஈடுப்பட்ட நபரை ஊக்கால் குத்தி , அதனை வீடியோ பிடித்து ஆதாரத்துடன் போலீஸ் பிடித்து கொடுத்துள்ளார்.  

வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கத்தை சேர்ந்த அந்த இளம்பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்துள்ளார். இந்நிலையில் பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட தொடங்கியதிலிருந்து, பெண் வழக்கறிஞர் அமர்ந்திருந்த பின் இருக்கையில் இருந்த ஆண் நபர் ஒருவர் அவரிடம் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.

ஆனால் ஆரம்பத்தில் தெரியாமல் பின் இருக்கையில் இருந்து கை, கால்கள் பட்டிருக்கலாம் என்று பெண் வழக்கறிஞர் நினைத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த நபர், வேண்டுமென்றே சீண்டலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த பெண் வழக்கறிஞர், தனது பர்ஸில் இருந்து ஊக்கை எடுத்து முன் இருக்கைக்கு நீண்டிய கையை வசமாக குத்தியதோடு, அதனை வீடியோவாக பதிவு செய்துக்கொண்டார். மேலும் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த ஆசாமியை கையும் களவுமாக பிடித்துக்கொண்டார்.

அந்த பேருந்தில் நடத்துனர் யாரும் இல்லாததால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பெண் வழக்கறிஞர், பஸ்ஸை நிறுத்தி மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் அந்த நபரை பிடித்து ஒப்படைத்தார். இதனையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான ராகவன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவன் மீது பெண்ணை மானங்கம் படுத்துதல், ஆபாச தீண்டலில் ஈடுப்படுவது, பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
 
இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ் பாபு, ஆய்வாளர் சிவனாந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் உடனடி விசாரணை நடத்தி 20 நிமிடத்திற்குள் ராகவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது. பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை சாமர்த்தியமாக தன்னிடம் இருந்த ஊக்கை பயன்படுத்தி, வசமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த செயல் அனைவரிடம் பாராட்டை பெற்றுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை