கள்ளக்காதல் விவகாரம்? பெண் கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு படுகொலை

By Velmurugan s  |  First Published Mar 3, 2023, 12:19 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டிட கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் அருகே உள்ள மாலைப்பட்டி காமாட்சி நகரைச் சேர்ந்தவர் செல்லமணி (வயது 45). இவருக்கு திருமணமாகி கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். கணவர் இறந்த நிலையில்  இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கட்டிட கூலி வேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வந்தார். கணவர் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட கூலித் தொழிலாளிகள் சிலர் செல்லமணியுடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

டெலகிராமில் கல்லூரி பெண்களை ஏலம் விட்ட வாலிபர்; சைபர் கிரைம் காவல்துறை அதிரடி

Latest Videos

இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி சென்று வீடு திரும்பிய இரண்டாவது மகன் சுந்தர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் அம்மா செல்லமணி தலையில் கல்லை போட்டு கொலை செய்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

2 ஆண்டுகளுக்கு பின் கச்சத்தீவு செல்லும் பக்தர்கள்; ஆட்சியரின் வார்த்தையால் மனம் நெகிழ்ந்த மக்கள்

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட செல்லமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்லமணியின் தகாத பழக்கவழக்கத்தால், அவருடன் தொடாபில் இருந்த யாரோ ஒருவர் தான் இந்த கொலையை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!