புருஷனுக்கு தெரியாமல் செல்போன் வாங்கியது குத்தமா? மனைவியை போட்டு தள்ள கூலிப்படை ஏவிய கொடூரம்.!

Published : Jan 25, 2022, 07:17 AM IST
புருஷனுக்கு தெரியாமல் செல்போன் வாங்கியது குத்தமா? மனைவியை போட்டு தள்ள கூலிப்படை ஏவிய கொடூரம்.!

சுருக்கம்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகே உள்ள நரேந்திரபூரை சேர்ந்தவர் ராஜேஷ் (40). இவரிடம் அவருடைய மனைவி ஸ்மார்ட் போன் வாங்கித் தரும்படி பலமுறை கேட்டு வந்துள்ளார். ஆனால், ராஜேஷ் மறுத்து விட்டார். இதனால், மனைவி ஏமாற்றம் அடைந்தார். 

ரகசியமாக  ஸ்மார்ட் போன் வாங்கிய மனைவியை கூலிப்படை வைத்து கொலை திட்டமிட்ட கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகே உள்ள நரேந்திரபூரை சேர்ந்தவர் ராஜேஷ் (40). இவரிடம் அவருடைய மனைவி ஸ்மார்ட் போன் வாங்கித் தரும்படி பலமுறை கேட்டு வந்துள்ளார். ஆனால், ராஜேஷ் மறுத்து விட்டார். இதனால், மனைவி ஏமாற்றம் அடைந்தார். பின்னர், தான் டியூஷன் எடுத்து சேமித்து வைத்திருந்த பணத்தில் கடந்த 1ம் தேதி கணவருக்கு தெரியாமல் கடைக்கு சென்று மனைவி புதிய ஸ்மார்ட் போனை வாங்கினார். 

இதை கேள்விப்பட்ட கணவர் ராஜேஷ் கடும் ஆத்திரமடைந்தார். இதனையடுத்து, மனைவியை கொலை செய்வதற்காக திட்டமிட்டார். இதற்காக கூலிப்படையை  ஏற்பாடு செய்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டின் கதவை மூடி விட்டு வருவதாக கூறி விட்டு சென்ற ராஜேஷ், நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த மனைவி வெளியே சென்று பார்த்தார். அப்போது, இருட்டில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத 2 பேர் பெண்ணை சரமாரியாக தாக்கினர். கழுத்தை கத்தியால் அறுத்தனர். அந்த பெண் அலறிக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்த 2 பேர் அங்கிருந்து தப்பித்தனர். 

உடனே அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர். கைது செய்த அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை கொல்ல கணவரே ஏற்பாடு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!