பல ஆண்களுடன் உறவு வைத்திருந்த மனைவி..? பல ஆண்டுகளாக அலமாரிக்குள் ஒளிந்து வேவு பார்த்த கணவன்..!

Published : Jul 14, 2020, 12:56 PM IST
பல ஆண்களுடன் உறவு வைத்திருந்த மனைவி..? பல ஆண்டுகளாக அலமாரிக்குள் ஒளிந்து வேவு பார்த்த கணவன்..!

சுருக்கம்

மனைவி மீது சந்தேகித்து வீட்டு அலமாரியில் ஒளிந்து வேவு பார்க்கும் கணவரை கண்டுபிடித்ததால் அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


மனைவி மீது சந்தேகித்து வீட்டு அலமாரியில் ஒளிந்து வேவு பார்க்கும் கணவரை கண்டுபிடித்ததால் அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் மகாதேவபூர் பகுதியில் வசிக்கும் 45 வயதான பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தன் மனைவியுடன் 17 ஆண்டுகளாக சந்தேகத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். கணவன் மற்றும் பாதிக்கப்பட்ட அவரது மனைவி கடந்த 2002 ஆம் ஆண்டு நண்பர்களாக பழகி பின் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஒரு வருட காலம் சந்தோஷமாக சென்ற அவர்களின் கல்யாண வாழ்க்கை அதன்பின் ஒரு சிறை போல் மாறியுள்ளது. பாதுகாப்பு துறையில் பணிபுரியும் அவர், தனது மனைவியின் மீது சந்தேகம் அடைந்து பல கொடுமைகளை செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் பணிக்கு செல்லாமல் 38 வயதான மனைவியை வீட்டின் அலமாரியில் ஒளிந்து கொண்டு வேவு பார்ப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளாக தனது கணவர் தன்னை உளவு பார்க்க அடிக்கடி அலுவலகத்தைத் தவிர்த்து வருவதை அறிந்த மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது கணவர் ஒரு  மன நோயாளி எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு சித்தப்பிரமைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அவர் தனது குடும்பத்தினரிடம் அன்பானவராக இருந்தார் எனவும், ஆனால் பின்னர் திடீரென்று சிகிச்சையை நிறுத்திய பிறகு இவ்வாறான செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மனைவியை பல ஆண்களுடன் உறவு வைத்திருப்பதாக அவருக்கு சந்தேக எண்ணம் தோன்றியுள்ளது. அதன் காரணமாக அந்த நபர் செய்தித்தாள் விநியோக மனிதர் மற்றும் பால் போடுபவர் ஆகியோருடன் சண்டையிட்டதாகவும், பல முறை தனது மனைவியை மிகக் கொடூரமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் தனது சர்ச் குழு உறுப்பினர்களிடம் தனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர், எனவே அவரிடமிருந்து வரும் எந்தவொரு அழைப்பையும் அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார். தற்போது அவரின் நிலை மோசமடைந்து தன்னை கொலை செய்ய சதி செய்ததாக அவரது மனைவி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!