நடத்தையில் சந்தேகம்... மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கணவர்..!

Published : Jan 01, 2019, 01:23 PM IST
நடத்தையில் சந்தேகம்... மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கணவர்..!

சுருக்கம்

கோவில்பட்டியில் மனைவி மீது சந்தேகமடைந்த கணவர் இரும்புக் கம்யியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவில்பட்டியில் மனைவி மீது சந்தேகமடைந்த கணவர் இரும்புக் கம்யியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து - விமலா தம்பதி இவர்கள் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. திடீரென மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தார். ஆகையால் பழைய வீட்டை காலி செய்துவிட்டு, பக்கத்து தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். 

அதிகாலையில் கணவர் எழுந்து பார்க்கும் போது மனைவி விமலா காணவில்லை. சந்தேகமடைந்த மாரிமுத்து பழையவீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது விமலா வேறொருவருடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டதும் ஆத்திரமடைந்த அடைந்த மாரிமுத்து மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விமலாவுடன் இருந்த வேறொரு நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு