செம்ம போதையில் கார் ஓட்டிய 1,500 பேர்!! அலேக்கா தூக்கி சென்று போலீஸ் ஸ்டேஷனில் தூங்கவைத்த போலீஸ்...

By sathish kFirst Published Jan 1, 2019, 10:25 AM IST
Highlights

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மும்பையில் மது போதையில் கார் , பைக் ஓட்டியதாக 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 70 க்கும் மேற்பட்டோர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததால் காவல் நிலையத்தில் தூங்க வைக்கப்பட்டனர்.

உலகம் முழுவதும் 2019ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. சென்னையில் நேற்று இரவிலிருந்தே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியது.  இதில் தலைநகரங்களான,  சென்னை, மும்பை டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஸ்டார் ஹோட்டல்களில், ஷாப்பிங் மால்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மது விருந்துகளும் நடந்துள்ளன.

இந்நிலையில், புத்தாண்டு முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. மும்பையில் ஆங்காங்கே வாகன சோதனை நடந்தது. இதில் மது அருந்தியவர்களை கண்டுபிடிக்க கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. 

இந்த அதிரடியான சோதனையில், மது அருந்தி கார், பைக் ஓட்டியதாக மொத்தம் 1,500 கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது வழக்கும், அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அளவுக்கு அதிகமாக குடித்த பலர் வாகனங்களுடன் காவல்நிலையத்தில் தூங்க வைக்கப்பட்டனர்.

click me!