வேறொருவரை மணந்த மனைவி ! பிரிந்த வேதனையில் பிச்சைக்காரராக மாறிய அரசு ஊழியர் !!

Published : Jul 29, 2019, 10:31 AM IST
வேறொருவரை மணந்த மனைவி ! பிரிந்த வேதனையில்  பிச்சைக்காரராக மாறிய அரசு ஊழியர் !!

சுருக்கம்

ஈரோடு அருகே மனைவி வேறொருவரை மணந்ததால் வேதனை அடைந்த கணவன் பைத்தியம் பிடித்து பிச்சைக்காரராக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பேருந்து  நிலையம் பகுதியில் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். அவரை மீட்கும் நடவடிக்கையில் அட்சயம் அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர்கள் முடிவு செய்தனர். இதனால் அவரிடம் சென்று விசாரித்தனர். 

அப்போது அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் (என்பதும், அவர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சிவக்குமாரை இளைஞர்கள் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு நேற்று அவர் ராசிபுரத்தில் உள்ள அணைக்கும் கரங்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

ஒரு அரசு ஊழியர் இப்படி பைத்தியம் பிடித்து பிச்சைக்காரராகியதற்கு என்ன காரணம் என்று அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் விசாரித்துள்ளனர். அப்போது தான் அந்த திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

மீட்கப்பட்ட சிவக்குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. அவருக்கு குழந்தை இல்லை. திருமணமான 3 ஆண்டுகளில் அவருடைய மனைவி பிரிந்து சென்று, வேறு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. 

இதனால் சிவக்குமார் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். அவரால் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை.அதன்பிறகு மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகினார். அரசு வேலையையும் அவரால் செய்ய முடியவில்லை. ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் ஈரோடு பஸ் நிலையத்தில் அவர் மீட்கப்பட்டார்.

காதல் படததில் காதல் தேர்வியால் விரக்தி அடைந்த பரத் இறுதியில் பைத்தியம் பிடித்து பிச்சை எடுத்து அலைவதைப் போல் சிவகுமார் இருந்தது பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி