கணவனை ஏமாற்றி காலேஜிக்கு போன பெண், திடீரென வந்த போன்... போனில் பலான போட்டோ... பழைய காதலனோடு எஸ்கேப்!! ஸ்டேஷனில் பஞ்சாயத்து!!

By sathish kFirst Published Jun 7, 2019, 4:30 PM IST
Highlights

கணவனை ஏமாற்றி கல்லூரிக்கு படிக்கப்போன மனைவி, தனது பழைய காதலனுடன் மீது உள்ள காதலால் கணவனையும் குழந்தையையும் தவிக்க விட்டு சென்ற சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடந்த பஞ்சாயத்தும் கண்கலங்க வைக்கிறது.

கணவனை ஏமாற்றி கல்லூரிக்கு படிக்கப்போன மனைவி, தனது பழைய காதலனுடன் மீது உள்ள காதலால் கணவனையும் குழந்தையையும் தவிக்க விட்டு சென்ற சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடந்த பஞ்சாயத்தும் கண்கலங்க வைக்கிறது.

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி கிராமத்தில் கனகராஜ் சென்னையில் ஒரு ஓட்டலும், தன்னுடைய சொந்த கிராமத்தில் ஒரு ஓட்டலும் வைத்து நடத்துகிறார்.  கனகராஜிக்கு  துறையூர் அருகே உள்ள கீராம்பூர் என்கிற கிராமத்தில் இருந்து சரண்யா என்கிற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர்களுக்கு கல்யாணமாகி நான்கு ஆண்டுகள், சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். சரண்யாவை  தனது மகளைப்போல பாசமாக பார்த்துக் கொண்டுள்ளனர் கனகராஜின் அம்மாவும், அப்பாவும்.கனகராஜும் தனது மனைவியை அளவுக்கு அதிகமாக காதலித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக சரண்யா கனகராஜிடம் நான் பிசிஏ படிச்சிருக்கேன் மேல படிக்கணும் வேலைக்குப் போகணும்னு ஆசையா இருக்கு என கேட்டதால், சரண்யா மீது இருந்த அளவுக்கு அதிகமான பாசத்தில பக்கத்து ஊரிலுள்ள  கல்லூரிக்கு அனுப்பி  படிக்க வைத்தார்.

சந்தோஷமாக  நகர்ந்து கொண்டிருந்த இவர்களது கல்யாண வாழ்க்கையில் திடீரென்று வந்த ஒரு போன் கால் இவர்களது வாழ்க்கையை வேறு ரோட்டுக்கு மாற்றியது. அந்த போன் காலில் நீங்க சரண்யாவோட புருஷன் கனகராஜ் தானே?  ஆமாம் என அவர் சொல்ல, அதற்க்கு நான் சரண்யா படிக்கும் காலேஜ்ல இருந்து பேசுறேன், நீங்க சரண்யாவோட செல்போனை வாங்கிக் கொஞ்சம் பாருங்க, என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார் அந்த பெண்.  

கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு வந்ததும் சரண்யாவின் போனை வாங்கி பார்த்தால் தன்னோட ஆசை மனைவி வேறு ஒருவனுடன் முத்தமிட்டும், கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கும் அந்த அசிங்கத்தைப் பார்த்து நிலைகுலைந்துப் போன கனகராஜ், சரண்யாவை அடித்தார். சரண்யாவும் அழுது கொண்டே நா தப்பு பண்ணிட்டேங்க, அவன் பெயர் செல்வம் எங்க ஊர் தான்,  சின்ன வயசுல இருந்தே காதலிச்சோம். அவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். நாங்க 2 பேரும் வேற வேற ஜாதி என்பதால் நடக்கல. எனக்கு உங்களோட திருமணம் ஆயிடுச்சு அவனுக்கு அடுத்துத் திருமணம் ஆகிடுச்சு, இப்ப தீடீர்ன்னு நாங்க  பார்த்தவுடன் பழைய பழக்கத்தில் தப்புப் பண்ணிட்டேன். இனிமே நான் அந்தத் தப்புப் பண்ணமாட்டேன் என சொல்லி அழுதுள்ளார். மனைவி மீதுள்ள பாசத்தால்,  சரி இனிமே ஒழுங்க இரு என்று மன்னித்து விட்டுள்ளார் கனகராஜ்.

இதனை அடுத்து  சில நாட்களில் சரண்யா கனகராஜ் மற்றும் அவர்கள் அம்மா அப்பா எல்லோருக்கும் குழம்பில் மயங்க மாத்திரை கலந்து இரவு நேரத்தில் சாப்பிட வைத்து இரவில் அவர்கள் மயங்கி தூங்கியவுடன் குழந்தை எடுத்துக்கொண்டு செல்வத்துடன் ஓடி விட்டார். காலையில் எழுந்து பார்த்ததும் மனைவி சரண்யாவும், குழந்தையும் இல்லாதது தெரிந்ததும் தேடி கடைசியில் என் மனைவியும், குழந்தையும் மீட்டுத் தாருங்கள் என்று போலீஸ் ஸ்டேஷனில்  புகார்  கொடுத்துவிட்டு கதறி அழுதுள்ளார் கனகராஜ்.

சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கள்ளக்ககாதலனின்  அம்மா அப்பாவை அழைத்து விசாரணையைத் துவங்கியது போலிஸ். சில நாட்களுக்குப் பின்  திடீரென கனகராஜிக்குச் செல்போனில் பேசிய  சரண்யானவின் கள்ளக்காதலன் நாங்க இரண்டு பேரும் துறையூரில் தான் இருக்கோம். நீ அங்க வா! சரண்யா உன்னோட வர்றதா சொன்னா கூட்டிட்டு போ இல்லன்னு அப்படியே போயிடு என்று பேச ஆத்திரத்தை அடக்கி கொண்ட கனகராஜ் உடனே அங்கே வரேன் என்று உறவினர்கள் அழைத்துக்கொண்டு துறையூர் பேருந்து நிலையத்திற்கு கனகராஜ் குடும்பத்தினர் போய்  பஸ்ஸாண்டில் போய் இறங்கியது கனகராஜ் தன் மனைவி சரண்யாவை  அடித்துள்ளார். அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியதும் எல்லோரையும் துறையூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றது போலீஸ். அனைவரையும்  ஒன்றாக நிற்கவைத்து ஸ்டேஷனில் விசாரணையைச் சிறுகனூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணையை நடத்தினர்.

கனகராஜ், என் மனைவியை ஆசையாகக் கல்யாணம் பண்ணி, அவளை 1 லட்சம் செலவு பண்ணி படிக்க வச்சேன். அவளை இவன் கூட்டிக்கிட்டு போய்ட்டான். அதனால் அவன் மீதும், என் மனைவி சரண்யா மீதும்  வழக்குப் பதிவு செய்யுங்கள். என் குழந்தையை எனக்குத் தாருங்கள் என்று புகார் வாசித்தார்.


 
உடனே இன்ஸ்பெக்டர் ராஜா இவுங்க 2 பேர் வழக்கு போடமுடியாது. அவுங்க இரண்டு பேரும் விருப்பபட்ட யார் கூட வேணா இருக்கலாம். நான் எதுவும் பண்ண முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்படியிருக்கு. நா என்னத்த செய்வது செய்ய என்று கேட்க, சரண்யாவும், செல்வமும் என்ன சொல்றாங்களோ அதைப் பொறுத்து தான் இருக்கு என்று இன்ஸ்பெக்டர் சொல்ல உடனே சரண்யா எனக்கு கனகராஜீம், அவன் குழந்தையும் வேண்டாம் நா என்னோட செல்வத்தோட போறேன் என்று எழுதி கொடுத்து அங்கிருந்து கிளம்பினார். வெளியே செல்வத்தின் மனைவி 2 குழந்தைகளைக் கையில் வைத்து அழுது கொண்டு நின்றிருந்தார்.  அப்போது செல்வத்தின் பெற்றோர் அழுதுகொண்டே மனைவி மற்றும் குழந்தையை அழைத்து சென்றனர்.

கனகராஜீன் உறவினர்கள்,  அந்தப் குழந்தையை அவ கிட்ட குடுத்திடு.. உனக்கு வேற திருமணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்ல அழுதுகொண்டே பேசிய கனகராஜ் இவ எனக்குப் பொறந்த குழந்தை ! என்று சொல்லிக்கொண்டு தோளில் போட்டுக்கொண்டு கலங்கிக்கொண்டே சென்றார்.

click me!