மனைவியுடன் வாழ மறுத்த வாலிபர்... அடித்து கொடூர கொலை!

Published : Sep 14, 2018, 01:04 PM ISTUpdated : Sep 19, 2018, 09:25 AM IST
மனைவியுடன் வாழ மறுத்த வாலிபர்... அடித்து கொடூர கொலை!

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டம் அக்கம்பட்டியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மகன் உதயகுமார் (25). அதே பகுதியில் பரோட்டா கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மாசாதேவி. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் அக்கம்பட்டியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மகன் உதயகுமார் (25). அதே பகுதியில் பரோட்டா கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மாசாதேவி. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். கணவன், மனைவி இடையே உறவினர்கள் பலமுறை சமரசம் பேசி, மீண்டும் குடும்பம் நடத்தும்படி அறிவுறுத்தினர். ஆனால், அதை அவர்கள் கேட்கவில்லை. இந்த பேச்சு வார்த்தையால், இரு குடும்பத்தினருக்கும் பெரும் வேதனை அளித்தது.

இந்நிலையில் நேற்று இரவு மாசாவின் உறவினர்கள், உதயகுமார் வீட்டுக்கு சென்றனர். அங்கு மீண்டும் சேர்ந்து வழும்படி கூறி, சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதை அவர் கேட்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், கடும் வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

 

இதைதொடர்ந்து உதயகுமார், தனது புரோட்டா கடையில் இரவு தூங்க சென்றார். அங்கு தூங்கி கொண்டிருந்த உதயகுமாரை, சிலர் சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டு தப்பினர். நேற்று காலை கடைக்கு சென்ற பொதுமக்கள், உதயகுமார் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்வரை வலைவீசி தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்