கணவன் இப்படி இருந்தால் இதுதான் முடிவா ? 11 மாத கைக்குழந்தை என்ன செய்தது..? விரக்தியின் உச்சம் உயிர் விடுவது தானா..?

Published : Apr 29, 2019, 04:38 PM IST
கணவன் இப்படி இருந்தால் இதுதான் முடிவா ? 11 மாத கைக்குழந்தை என்ன செய்தது..? விரக்தியின் உச்சம் உயிர் விடுவது தானா..?

சுருக்கம்

குழந்தை பிறந்து 11 மாதங்கள் ஆகியும் தன்னை உடன் அழைத்து செல்லாததால் மனைவி தன்னுடைய 11 மாத கைக்குழந்தையை தண்ணீரில் மூழ்கச் செய்து துடிதுடிக்க இறக்க செய்துள்ளார்.

கணவன் இப்படி இருந்தால் இதுதான் முடிவா ? 

குழந்தை பிறந்து 11 மாதங்கள் ஆகியும் தன்னை உடன் அழைத்து செல்லாததால் மனைவி தன்னுடைய 11 மாத கைக்குழந்தையை தண்ணீரில் மூழ்கச் செய்து துடிதுடிக்க இறக்க செய்துள்ளார். உடனே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகனூர் அருகே உள்ள செவந்த பாளையத்தை சேர்ந்தவர்கள் மகேஷ் மற்றும் இவரது மனைவி மனோ பிரியா இவர்களுக்கு 11 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. மனோ ப்ரியாவின் கணவர் மகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னையும் குழந்தையையும் உடன் அழைத்துச் செல்லுங்கள் என பலமுறை மகேஷிடம் வாக்குவாதத்தில்  மோகனப்பிரியா தெரிவித்து உள்ளார். ஆனால் எவ்வளவு சொல்லியும் மகேஷ் இவர்களை அழைத்து செல்ல தயாராக இல்லையாம். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற மனோ பிரியா என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய குழந்தையை வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் முழுக செய்து துடிதுடிக்க இறக்க செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட புகாரை அடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கணவர் மகேஷ் பெங்களூருவில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா..? என்கிற பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

சார், எமர்ஜென்சி... கடிதம் எழுதி வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட முன்னாள் போலீஸ் ஐஜி..! பகீர் பின்னணி..!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!