
வெள்ளகோவில் முத்தூர் தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் . இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். லட்சுமி திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் லட்சுமிக்கும் அதே ஊரை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் தெரிந்ததும் ஜெகநாதன் மனைவியை கண்டித்தார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் திருப்பூருக்கு வேலைக்கு சென்ற லட்சுமி வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் தேடிப்பார்த்தும் லட்சுமியை கண்டு பிடிக்கமுடிய வில்லை. ஆனால் லட்சுமி தனது இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு ராம்குமாருடன் ஓடிப்போனது தெரியவந்தது. இதனால் விரக்தியில் இருந்த ஜெகநாதன் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஜெகநாதனின் தந்தை வீரன் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மருமகளும், இதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரும் பழகி வந்தனர். இதனை எனது மகன் தட்டிக்கேட்டார். இதனால் மருமகள் லட்சுமி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அந்த விரக்தியில் இருந்த எனது மகன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.