அடிதூள்.. ஆபரேஷன் கஞ்சா 2.0 ஆரம்பம்.. களத்தில் இறங்கிய டிஜிபி சைலேந்திர பாபு..

By Ezhilarasan BabuFirst Published Mar 29, 2022, 11:47 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் கஞ்சாவை ஒழிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கஞ்சா  வேட்டை 2.0 ஒரு மாதம் நடத்தப்பட வேண்டுமென தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கஞ்சாவை ஒழிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கஞ்சா  வேட்டை 2.0 ஒரு மாதம் நடத்தப்பட வேண்டுமென தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது போதைப்பொருள் கடத்தல் மட்டும் விற்பனை கும்பலுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த மோசமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கொலை, கொள்ளை, கூலிப்படை கொலைகள், பழிவாங்கும் அரசியல் கொலைகள் போன்றவற்றை தடுக்க காவல் துறை தீவிரம் காட்டி வருகிறது.

மறுபுறம் கஞ்சா விற்பனை என்பது தமிழகத்தில் வியாபித்துள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதை முற்றிலும் ஒழிக்க தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு  ஜனவரி மாதம் வரை நடத்தப்பட்ட கஞ்சா சோதனையில் பல கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பல குற்றவாலிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆபரேஷன் கஞ்சா 2.0 இந்த மாதம் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை ஒரு மாதம் அளவிற்கு நடத்தப்பட வேண்டுமென அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா குட்கா போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் போதைப்பொருளின் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பது, தொடர்ச்சியாக அந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது அடைப்பது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கஞ்சா கொள்முதல், பதுக்கல் மற்றும் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல் மற்றும் விற்பனையை செய்யும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கஞ்சா குட்கா பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்க உதவி வேண்டும் என்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளை உள்ளவர்களை காவல் ஆய்வாளர் வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி இரகசிய தகவல்களை சேகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் கஞ்சா கடத்தி செல்வதை கண்காணித்து கைது நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பார்சல் மூலமாக போதை மாத்திரை, மற்றும் போதை மருந்துகள் விற்பனை செய்திகளை கண்காணிக்க தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் இந்த பணியினை கூடுதல் காவல் ஆணையர் சட்டம் ஒழுங்கு அவர்கள் தினமும் கண்காணித்து மாநில கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் மற்றும் டிஜிபி தனது சுற்றறிக்கை  மூலம் தெரிவித்துள்ளார். 
 

click me!