விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட ஒட விரட்டி படுகொலை... சென்னையில் பதற்றம்..!

Published : Aug 16, 2020, 11:06 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட ஒட விரட்டி படுகொலை... சென்னையில் பதற்றம்..!

சுருக்கம்

சென்னையில் மதுபாட்டில் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்த தொழில் போட்டியால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் மதுபாட்டில் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்த தொழில் போட்டியால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவை சேர்நதவர் கேசவன் (40). விடுதலை  சிறுத்தைகள் கட்சி ஆா்கே நகர் பகுதி துணை  செயலாளர். இவரது மனைவி பிரியா (38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பலர், வெளி மாவட்டங்களில்  இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரும், ஆர்.கே.நகர் தொகுதி செயலாளருமான கேசவன், மதுபாடில்களை வாங்கி வந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதே பகுதியை சேர்ந்த சிலரும், மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று மாலை கேசவன் தெருவில் நடந்து சென்றார். அப்போது, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கேசவனை விரட்டியது. பின்னர், சுற்றி வளைத்து கேசவனை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த மர்மகும்பல் அங்கு இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மகும்பல் தப்பி ஓடி விட்டது.

உடனே தகவல் அறிந்த தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கேசவனை மீட்டு, ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!