கண் இமைக்கும் நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை... நாகர்கோவிலில் பதற்றம்..!

Published : Aug 06, 2019, 01:31 PM IST
கண் இமைக்கும் நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை... நாகர்கோவிலில் பதற்றம்..!

சுருக்கம்

ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, 5 பேரும் ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொலை சினிமாவில் நடப்பது போல் கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து முடிந்தது. 

நாகர்கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை பகுதியை சேர்ந்த புஷ்பாகரன் (36). கூலி தொழிலாளியான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவர் நேற்று மதியம் பறக்கையில் இருந்து என்.ஜி.ஓ. காலனிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த புஷ்பாகரன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். ஆனாலும், அந்த கும்பல் அவரை விடாமல் சினிமாவை மிஞ்சும் அளவில் ஓட ஓட விரட்டி வெட்டியது. 

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, 5 பேரும் ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொலை சினிமாவில் நடப்பது போல் கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து முடிந்தது. 

இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புஷ்பாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபகுதியில் சில நாட்களுக்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
மருமகளின் தலையை தனியாக துண்டித்த மாமியார்.. நந்தினி மீது எதுக்கு இவ்வளவு கோபம்.! பரபரப்பு தகவல்!