ஒரே இரவில்! கஞ்சா, அரிவாளுடன் சுற்றித்திரிந்த 13 பேரை கொத்தாக தட்டித்தூக்கிய போலீஸ்!

Published : Aug 28, 2025, 04:22 PM IST
thoothukudi

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனை செய்த 7 பேரும், அரிவாளுடன் சுற்றித்திரிந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் மதன் மேற்பார்வையில் நேற்று இரவு தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளமுத்து நகர் சந்திப்பு நகர், பொன் சுப்பையா நகர், மாப்பிள்ளையூரணி விளக்கு உள்ளிட்ட 8 பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தின் 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், ஒரு சார்பு ஆய்வாளர், 5 காவலர்கள் அடங்கிய 8 காவல் குழுவினர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 91 காவல்துறையினர் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை செய்தும், தீவிர ரோந்து பணி மேற்கொண்டும் குற்றவாளிகள் தேடுதல் வேட்டையில் (Search Operation) ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 7 பேரையும் மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த 6 பேர் என மொத்தம் 13 பேர் நேற்று இரவு ஒரே நாளில் மேற்படி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்த 1,100 கிலோ கிராம் கஞ்சாவையும், 4 அரிவாள்களையும் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குகள் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் ரவுடித்தனம் செய்பவர்கள், அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றி திரிபவர்கள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் மாவட்ட காவல் அலுவலக எண் 0461 2340700, 9498101830 மற்றும் ஹலோ போலீஸ் எண் 95141 44100 ஆகிய எண்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?
காதல் கல்யாணம் பண்ண மூன்றே மாசத்துல என் பொண்ண கொன்னுட்டாங்களே! நெஞ்சில் அடித்து கதறும் தாய்