டயோட்டா கார் வாங்கிறவங்களே உஷார் ! 27 லட்சம் ரூபாய் புது கார் ஓட்டை உடைசலாய் இருக்குன்னு போராட்டம் நடத்திய திருவண்ணாமலை பெண் !!

By Selvanayagam PFirst Published May 15, 2019, 10:10 AM IST
Highlights

வேலூர் அருகே உள்ள டயோட்டா கம்பெனியில் 27 லட்சம் ரூபாய் கொடுத்து புதிதாக வாங்கிய காரில் ஏராளமான  கோளாறுகள் இருந்ததையடுத்து அதை வாங்கிய பெண் ஒருவர் அந்த நிறுவனத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 
 

திருவண்ணாமலையைச் சேர்ந்த இளவரசி என்பவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காட்பாடியில் உள்ள டயோட்டா நிறுவனத்தில் 27 லட்சம் ரூபாய் கொடுத்து புதிதாக டயோட்ட கார் ஒன்றை வாங்கினார்.

ஆனால் கார் வாங்கியது முதல் தொடர்ந்து அந்த புதிய காரில் ஏராளமான கோளாறுகள் இருந்தது. இதையடுத்து அந்த காரை கம்பெனியில் கொடுத்து பழுதுநீக்கச் சொன்னார். ஆனால் பல முறை பழுது நீக்கப்பட்டும் தொடர்ந்து அந்த கார் பழுதடைந்து கொண்டே இருந்ததது.

ஆனால் காரில் பல்வேறு கோளாறுகள் இருந்ததை நிர்வாகத்தினர் மறைத்ததாக இளவரசி குற்றம் சாட்டினார். அதனால் வேறு கார் மாற்றித்தர வேண்டும் என இளவரசி கோரிக்கை விடுத்தார். ஆனால் நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளாததால் இளவரசி தனது உறவினர்களுடன்  கம்பெனி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதிய கார், எந்தப் பிரச்சனையும் இருக்காது என நினைத்து 27 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய காரால் தான் நிம்மதி இழந்துவிட்டதாக இளவரசி தெரிவித்தார்.

click me!